Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள் Questions and Answers, Notes.
TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 1 விஜயநகர், பாமினி அரசுகள்
7th Social Science Guide விஜயநகர், பாமினி அரசுகள் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
அ) புக்கர்
ஆ) தேவராயா – II
இ) ஹரிஹரர் – II
ஈ) கிருஷ்ண தேவராயர்
விடை:
ஆ) தேவராயா – II
Question 2.
விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
அ) யானை
ஆ) குதிரை
இ) பசு
ஈ) மான்
விடை:
ஆ) குதிரை
Question 3.
சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) ராமராயர்
ஆ) திருமலதேவராயா
இ) இரண்யம் தேவராயர்
ஈ) இரண்டாம் விருபாக்சராயர்
விடை:
ஈ) இரண்டாம் விருபாக்சராயர்
Question 4.
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
அ) சாளுவ நரசிம்மர்
ஆ) இரண்டாம் தேவராயர்
இ) குமார கம்பண்ணா
ஈ) திருமலை தேவராயர்
விடை:
இ) குமார கம்பண்ணா
Question 5.
பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
அ) அலாவுதீன் ஹசன்விரா
ஆ) முகம்மது – 1
இ) சுல்தான் பெரோஸ்
ஈ) முஜாஹித்
விடை:
இ) சுல்தான் பெரோஸ்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
ஆரவீடு வம்சத்தின் தலைநகரம். ………………………..
விடை:
பெனுகொண்டா
Question 2.
விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு ………………. என்று பெயர்
விடை:
வராகன்
Question 3.
மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் …………………… வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
விடை:
பாரசீக
Question 4.
விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை ……………. கவனித்தார்.
விடை:
கௌடா என்ற கிராமத்தலைவர்
III. பொருத்துக
விடை:
IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும் 1
Question 1.
கூற்று : இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.
காரணம் : விஜயநகர இராணுவம் பீரங்கிப்படை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
இ) காரணம் மற்றும் கூற்று தவறு
ஈ) காரணம் மற்றும் கூற்று சரி
விடை:
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
Question 2.
தவறான இணையைக் கண்டறியவும்
அ) பட்டு – சீனா
ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா
இ) விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா
ஈ) மதுரா விஜயம் – கங்கா தேவி
விடை:
ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா
Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி :
அ) ஹரிஹரா – II
ஆ) மகமுது – 1
இ) கிருஷ்ண தேவராயர்
ஈ) தேவராயா – 1
விடை:
ஆ) மகமுது – 1
Question 4.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும்
I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
II. விஜயநகர, பாமினி அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணாதுங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணாகோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.
III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.
IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராக பணியாற்றினார்.
அ) I, II மற்றும் IV சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) II, III மற்றும் IV சரி
ஈ) III மற்றும் IV சரி
விடை:
அ) I, II மற்றும் IV சரி
V. சரியா? தவறா?
Question 1.
பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரா மற்றும் புக்கர் ஆவார்கள்
விடை:
தவறு
Question 2.
இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்
விடை:
தவறு
Question 3.
அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார்
விடை:
சரி
Question 4.
விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
விடை:
சரி
Question 5.
பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன
விடை:
சரி
VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்
Question 1.
விஜயநகர் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.
விடை:
- சங்கம் வம்சம் – தேவராயர் – II
- சாளுவ வம்சம் – சாளுவ நரசிம்மா
- துளுவ வம்சம் – கிருஷ்ணதேவராயர்
- ஆரவீடு வம்சம் – திருமலைதேவராயர்
Question 2.
தலைக்கோட்டைப் போரைப் பற்றி எழுதுக.
விடை:
- விஜயநகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்ட னர்.
- எதிரிகளின் கூட்டுப் படைகள் 1565 -ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர் கொண்டனர்.
- ராக்சச தங்கம் (தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட இப்போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. இறுதியில் விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.
Question 3.
விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.
விடை:
- பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்) நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்) கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது.
- ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது.
- கிராமம் நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாகும் கிராமத்தில் கிராம சபை என்ற அமைப்பு இருந்தது.
- கிராமத்தை கௌடா என்ற கிராமத்தலைவர் நிர்வாகித்தார்.
Question 4.
தக்காண சுல்தானத்தின் ஐந்து சுதந்திர அரசுகள் யாவை?
விடை:
- பிடார்
- அகமதுநகர்
- பெரார்
- கோல்கொண்டா
- பிஜப்பூர்
Question 5.
அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைக் கூறுக.
விடை:
- அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி ஜாபர்கான் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார்.
- பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர்ப் பயிற்சி பெறுவதற்காக பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.
VII. விரிவாக விடையளிக்க
Question 1.
கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.
விடை:
- கிருஷ்ணதேவராயர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்கினார். இதுவே அவரது முதல் மற்றும் தலையாய பணியாக இருந்தது.
- பின்னர் குல்பர்காவை கைப்பற்றினார்.
- சிறைவைக்கப்பட்டிருந்த பாமினி சுல்தான் முகமது ஷா-வை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர்த்தினார்.
- ஓடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிராதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார். பின் சமாதானத்தை விரும்புவதாகவும், தன் மகளை மணமுடித்து தருவதாகவும் கூறிய பிரதாபருத்திரனின் பகுதிகளை மீண்டும் அவருக்கே வழங்கினார்.
- போர்ச்சுக்கீசிய வீரர்களை உதவியோடு கோல்கொண்டா சுல்தானை தோற்கடித்தார்.
- பிஜப்பூர் சுல்தானிடமிந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்
- மழைநீரைச் சேமிக்க நீர்ப்பாசன குளங்கள் நீர்த்தேக்கங்கள் உருவாக்கினார்.
- தலைநகரில் கிருஷ்ணசாமி கோயில், வித்தலசாமி ராமசாமி போன்ற புகழ்பெற்ற கோவில்களையும் வலிமைமிக்க கோட்டைகளையும் கட்டினார்.
- போர்கள் மூலம் பெற்ற செல்வங்களைக் கொண்டு கோபுரங்கள் நிறுவினர். அக்கோபுரங்கள் ராயபுரம் என அவா பெயருக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் அழைக்கப்பட்டது.
- பெரும் படையை நிறுவிய அவர் அரேபியா ஈரானிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்தார்.
- போர்ச்சுக்கீசிய, அராபிய வணிகர்களுடன் கொண்டிருந்த நட்புறவால் நாட்டின் வருமானம் அதிகரித்தது.
VIII. உயர் சிந்தனை வினா
Question 1.
விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.
விடை:
கிருஷ்ண தேவராயருக்குப் பின் விஜயநகருக்கு எதிராக போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர். எதிரிகளின் கூட்டுப்படைகள் 1565-ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரை எதிர்கொண்டன. இதில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. விஜயநகரம் இருந்த இடம் தற்போது ஹம்பி என அழைக்கப்படுகிறது.
பாமன்ஷாவைத் தொடர்ந்து முதலாம் முகமது ஷா அரச பதவி ஏற்றார். விஜயநகரோடு அவர் மேற்கொண்ட இரு போர்களினால் பயனேதும் ஏற்படவில்லை. ஆனால் 1368-ல் வாரங்கல் அரசரோடு போரிட்டதின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் இழப்பீடாக பெற்றார். இச்சிம்மாசனமே பாமினி சுல்தான்களின் அரியணை ஆயிற்று.
IX. வரைபடம்
Question 1.
விஜயநகர் மற்றும் பாமினி அரசுகளின் எல்லைகளைக் குறிப்பிடுக.
விடை:
(வரைப்படப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )
X. கட்டக வினாக்கள்
Question 1.
180 வருடத்திற்கு மேலாக ஆட்சிபுரிந்த 18 முடியரசுகளைப் பட்டியலிடுக
விடை:
பாமினி அரசுகள்
Question 2.
கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த பாமினி சுல்தானைக் குறிப்பிடுக
விடை:
முகமது ஷா
Question 3.
கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருதத்தில் எழுதிய புத்தகத்தைக் கூறுக
விடை:
ஜாம்பவதி கல்யாணம்
Question 4.
ஹசன் பாமன் ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்?
விடை:
குல்பர்கா
XI. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)
Question 1.
தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசின் கலை மற்றும் கட்டடக் கலையின் வடிவில் அமைந்துள்ள கோவில்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருக.
Question 2.
வகுப்பறையில் தெனாலிராம கிருஷ்ணாவின் கதைகளை வகுப்பில் படித்துக் காட்டுக.
7th Social Science Guide விஜயநகர், பாமினி அரசுகள் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
சமஸ்கிருத மொழியில் கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட நாடகத்தின் பெயர்.
அ) அமுக்தமால்யதா
ஆ) ஜாம்பவதி கல்யாணம்
இ) மதுரை விஜம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) ஜாம்பவதி கல்யாணம்
Question 2.
ஏனைய அமைச்சர்களின் பணியை மேற்பார்வையிட்டவர் ………….
அ) வஸிரி – குல்
ஆ) பேஷ்வா
இ) நஷீர்
ஈ) கொத்தவால்
விடை:
அ) வஸிரி-குல்
Question 3.
பாமினி அரசை நிறுவியவர் …………………….
அ) சுல்தான் பெரோஸ்
ஆ) முகமது கவான்
இ) அலா-வு-தீன் ஹசன் ஷா
ஈ) முஜாகித்
விடை:
இ) அலா -வு-தீன் ஹசன் ஷா
II . கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
கோல்கொண்டா கோட்டையின் மிக உயரமான இடம் ………………….
விடை:
பால ஹிசார்
Question 2.
பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் ஒன்று என குறிப்பிட்டது …………………..
விடை:
பிர்தௌசியின் ஷா நாமா
Question 3.
ஒவ்வொரு மண்டலமும் ……………. என்ற ஆளுநரின் கீழிருந்தது.
விடை:
மண்டலேஸ்வரா
Question 4.
கிழக்கு கர்நாடகத்தில் ………………. நதிக்கரையில் விஜயநகரம் காணப்பட்டது.
விடை:
துங்கபத்திரா
Question 5.
நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாக இருந்தது …………………
விடை:
கிராமம்
III. பொருத்துக
IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்
Question 1.
கூற்று : கிருஷ்ணதேவராயர் போர்த்துகீசிய அராபிய வணிகர்களுடன் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார்
காரணம் : அதனால் சுங்கவரிகள் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்தது.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
இ) காரணம் மற்றும் கூற்று தவறு
ஈ) காரணம் மற்றும் கூற்று சரி
விடை:
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
Question 2.
பொருந்தாததை கண்டுபிடிக்கவும்.
மண்டலங்கள், நாடுகள், ஸ்தலங்கள், கிராமங்கள், ஜக்கம்மா
விடை:
ஜக்கம்மா
Question 3.
கீழ்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும்.
I. சுல்தான்களின் சூழ்ச்சிகளால் விஜயநகர அரசு வீழ்ச்சியுற்றது.
II. விஜய நகர அரசை தோற்றுவித்தவர் மூன்றாம் முகமது.
III. மகமது கவான் கவிஞரும் உரைநடை எழுத்தாளருமாவார்.
IV. அலாவுதீன்-ஷசன் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
அ) I, III சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) III, IV சரி
ஈ) I, IV சரி
விடை:
ஆ) I, III சரி
V. சரியா? தவறா?
Question 1.
கட்டடக் கலைக்குப் பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பை குல்பர்காவில் காணலாம்.
விடை:
சரி
Question 2.
முதலாம் முகமது தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும் பெயர் பெற்றவராவார்.
விடை:
தவறு
Question 3.
விஜயநகரப் பேரரசு உலகம் அறிந்திருந்த மிகவும் செல்வச் செழிப்பு மிக்க அரசுகளில் ஒன்றாகும்.
விடை:
சரி
VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்
Question 1.
கோல்கொண்டா கோட்டை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 11கி.மீ தொலைவில் ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெயர் பெற்றதாகும். கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும்.
Question 2.
கிருஷ்ண தேவராயர் கட்டிய கோயில்களின் பெயர்களை கூறுக.
விடை:
- கிருஷ்ணசாமி கோவில்
- ராமசாமி கோவில்
- வித்தலசாமி கோவில்
VII. விரிவான விடையளி
Question 1.
விஜயநகர பேரரசின் பொருளாதாரநிலை குறித்து ஒரு பத்தியில் விடையளி.
விடை:
- உலகம் அறிந்திருந்த மிகவும் செல்வச்செழிப்பு மிக்க அரசுகளில் ஒன்று விஜயநகரப்பேரரசு .
- 15ம், 16ம் நூற்றாண்டுகளில் பேரரசிற்கு வருகைபுரிந்த பல அயல்நாட்டுப் பயணிகள், தங்கள் பயணக்குறிப்புகளில் பேரரசின் செல்வம், மேன்மை குறித்து எழுதியுள்ளனர்.
- விஜயநகரப் பேரரசர்கள் வராகன் என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர்.
மனவரைபடம்