Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

7th Social  Science Guide அரசியல் கட்சிகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
இரு கட்சி முறை என்பது
அ) இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
ஆ) இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது
இ) இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை
விடை:
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை

Question 2.
இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
அ) ஒரு கட்சி முறை
ஆ) இரு கட்சி முறை
இ) பல கட்சி முறை
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) பல கட்சி முறை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 3.
அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு
அ) தேர்தல் ஆணையம்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) உச்ச நீதிமன்றம்
ஈ) ஒரு குழு
விடை:
அ) தேர்தல் ஆணையம்

Question 4.
அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?
அ) சமயக் கொள்கைகள்
ஆ) பொது நலன்
இ) பொருளாதார கோட்பாடுகள்
ஈ) சாதி
விடை:
ஆ) பொது நலன்

Question 5.
ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்ஸ்
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது __________.
விடை:
அரசியல் கட்சிகள்

Question 2.
நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும் __________ என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.
விடை:
தேர்தல் ஆணையம்

Question 3.
அரசியல் கட்சிகள் ____________ மற்றும் ___________ இடையே பாலமாக செயல்படுகின்றன.
விடை:
குடிமக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும்

Question 4.
ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் __________ அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது.
விடை:
அங்கீகரிக்கப்படாத

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 5.
எதிர்க்கட்சித் தலைவர் _________ அந்தஸ்தில் இருப்பார்.
விடை:
கேபினட் அமைச்சர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 2

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க

Question 1.
பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க.
அ) நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
ஆ) தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.
இ) தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 2.
கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம் : தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணம் தவறு, கூற்று சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

V. ஓரிரு வாக்கியங்களில் விடைகளை எழுதுக

Question 1.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் யாவை?
விடை:
ஓர் அரசியல் கட்சியின் அடிப்படைக் கூறுகள் :

  • தலைவர்
  • செயல் உறுப்பினர்கள்
  • தொண்டர்கள்

Question 2.
மூன்று வகை கட்சி முறைகளைக் குறிப்பிடுக.
விடை:
கட்சி முறைகள் :

  • ஒரு கட்சி முறை
  • இரு கட்சி முறை
  • பல கட்சி முறை

Question 3.
இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
இரு கட்சி முறை காணப்படும் நாடுகள் :

  • பிரிட்டன் (தொழிலாளர் கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி)
  • அமெரிக்க ஐக்கிய நாடுகள் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக் கட்சி)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 4.
குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்.
விடை:
கூட்டணி அரசாங்கம் :

  • பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை .
  • இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.

VI. பின்வருவனவற்றிற்கு விடை அளிக்கவும்

Question 1.
அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கினை எழுதுக.
விடை:
அரசியல் கட்சியின் செயல்பாடுகள் :

  • வழங்குதல்
  • பரிந்துரைத்தல்
  • ஏற்பாடு செய்தல்
  • ஊக்குவித்தல்
  • ஒருங்கிணைத்தல்
  • ஆட்சி அமைத்தல் ஆகியன

ஏற்பாடு செய்தல் :
அரசியல் பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை ஏற்பாடு செய்தல், தேர்தலில் வெற்றி பெற தேர்தல் அறிக்கையை வெளியிடுதல் ஆகியன ஓர் அரசியல் கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும்.

பரிந்துரைத்தல் :
அரசியல் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனி நபரை பரிந்துரை செய்கிறது.

ஊக்குவித்தல் :
அரசியல் கட்சி மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் முன் வைக்கிறது.

ஆட்சி அமைத்தல் :
அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல், பொதுவான கொள்கையை உருவாக்குதல் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் செய்கின்றன.

Question 2.
ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?
விடை:
அரசியல் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுதல் :
இந்தியாவில் அரசியல் கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

  1. மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6% வாக்குகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  2. ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  3. இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2 % தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

VI. உயர் சிந்தனை வினா

Question 1.
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியமா?
விடை:
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியம். ஏனெனில்,
அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பாகும். அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

அரசியல் கட்சிகள் பொதுக் கருத்துக்களை உருவாக்குவதில்லை. அவை குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 2.
தேசிய கட்சி, மாநிலக் கட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகியவற்றிற்கு சில உதாரணங்கள் தருக.
விடை:
தேசிய கட்சி : > காங்கிரஸ்

  • பாரதிய ஜனதா கட்சி
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி

மாநிலக் கட்சி :

  • திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
  • அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)
  • ஆம் ஆத்மி கட்சி
    அசாம் கன பரிஷத்

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி :

  • அம்ரா பங்ளி (மேற்கு வங்களாம்)
  • மக்கள் ஜனநாயக முன்னணி (திரிபுரா)
  • இந்திய ஜனநாயக கட்சி (தமிழ்நாடு)
  • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (தமிழ்நாடு)

VIII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

Question 1.
ஒரு தேர்தல் அறிக்கையை எழுதுக. (election manifesto) (நீ ஒரு கட்சித் தலைவராக இருந்தால்)

7th Social  Science Guide அரசியல் கட்சிகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இந்தியா __________ ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது.
அ) 1947
ஆ) 1949
இ) 1950
ஈ) 1952)
விடை:
இ) 1950

Question 2.
ஓர் அரசியல் கட்சி _____________ அடிப்படை ககொண்ட
அ) 3
இ) 5
ஈ) 6
பொன்
விடை:
அ) 3

Question 3.
அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளில் ஒன்று _________
அ) தொழிலாளர் கட்சி
ஆ) காங்கிரஸ் கட்சி
இ) பழமை வாதக் கட்சி
ஈ) ஜனநாயகக் கட்சி
விடை:
ஈ) ஜனநாயகக் கட்சி

Question 4.
ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிக்க அக்கட்சி குறைந்தபட்சம் __________ உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்
அ) 50
ஆ) 100
இ) 500
ஈ) 1000
விடை:
ஆ) 100

Question 5.
எதிர்க்கட்சித் தலைவர் ___________ அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
அ) முதலமைச்சர்
ஆ) கேபினட் அமைச்சர்
இ) பிரதமர்
ஈ) துணை அமைச்சர்
விடை:
ஆ) கேபினட் அமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
துடிப்பான ____________ நாட்டிற்கு ஒரு வலிமையான அரசியல் கட்சி அவசியம்.
விடை:
மக்களாட்சி

Question 2.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை இடம் ___________ ல் அமைந்துள்ளது.
விடை:
புதுதில்லி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 3.
____________ ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அல்லது ஒதுக்கப்படாத சின்னங்கள் என இருவகை உண்டு.
விடை:
1968

Question 4.
_____________ சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது.
விடை:
விலங்குகளின்

Question 5.
___________ மற்றும் ___________ தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு வாய்ந்தது ஆகும்.
விடை:
சுதந்திரமான, நியாயமான

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 3

IV. சரியா தவறா என குறிப்பிடுக

Question 1.
மக்களாட்சியில் மக்கள் எந்த விஷயங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.
விடை:
சரி

Question 2.
பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது.
விடை:
சரி

Question 3.
விதிவிலக்காக யானை மற்றும் சிங்கம் ஆகிய சின்னங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
விடை:
சரி

Question 4.
சிவசேனா மகராஷ்மரத்தில் ஒரு மாநிலக் கட்சி
விடை:
சரி

Question 5.
ஸ்வீடன் இரு கட்சி முறை கொண்டது.
விடை:
தவறு
சரியான கூற்று : ஸ்வீடன் பலகட்சி முறை கொண்டது

V. தவறான இணையைக் கண்டுபிடி

1. ஒதுக்கப்பட்ட சின்னங்கள் – அங்கீகரிக்கப்பட்ட கட்சி
3. தனித்துவமான சின்னங்கள் – இந்திய உச்சநீதி மன்றம்
விடை:
3) தனித்துவமான சின்னங்கள் – இந்திய உச்சநீதி மன்றம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

VI. பொருந்தாதைக் கண்டுபிடி

Question 1.
பிரான்ஸ், கொரியா, ஸ்வீடன், நார்வே
விடை:
கொரியா

Question 2.
திமுக, அதிமுக, பிஜேபி, மதிமுக
விடை:
பிஜேபி

VII. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க

Question 1.
எது/ எவை சரியான கூற்று கூற்றுகள்.
அ) கூட்டாட்சி அமைப்பை பின்பற்றும் நாடுகளில் இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன.
ஆ) கியூபாவில் ஒரு கட்சி முறை நடைமுறையில் உள்ளது.
இ) நார்வே பல கட்சி முறையைப் பின்பற்றுகிறது.
ஈ) தேர்தல் குழு சின்னங்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படுகிறது.
விடை:
அனைத்தும் சரி

Question 2.
கூற்று : சில கட்சிகள் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கின்றன.
காரணம் : பலகட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணம் தவறு, கூற்று சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

VIII. ஓரிரு வாக்கியங்களில் குறுகிய விடையளி

Question 1.
ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிப்பது எப்படி?
விடை:
அரசியல் கட்சியை தோற்றுவித்தல் : ஓர் அரசியல் கட்சி

  • இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
  • குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் அட்டையை கொண்டிருத்தல் வேண்டும்.
  • கட்சி அமைப்பு குறித்த ஆவணத்தை கொண்டிருத்தல் வேண்டும்.

Question 2.
தேர்தல் ஆணையம் பற்றி உனக்கு என்ன தெரியும்?
விடை:
தேர்தல் ஆணையம் :

  1. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான சட்டப்படியான அரசியலமைப்பு ஆகும்.
  2. இதன் தலைமை இடம் புதுதில்லியில் அமைந்துள்ளது.

Question 3.
‘சுயேட்சை வேட்பாளர்’ – விளக்குக.
விடை:
சுயேட்சை வேட்பாளர் : சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்தக் கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 4.
‘தேர்தல் குழு சின்னங்கள்’ – சிறுகுறிப்பு வரைக.
விடை:
தேர்தல் குழு சின்னங்கள் :
1968 ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என்று இரண்டு வகை உள்ளது.

ஒதுக்கப்பட்ட சின்னம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டுமானது என பொருள்படும்.

ஒதுக்கப்படாத சின்னம் என்பது அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் ஆகும்.

IX. விரிவான விடையளி

Question 1.
எப்பொழுது ஓர் அரசியல் கட்சி பிராந்திய / மாநிலக் கட்சி என அங்கீகரிக்கப்படுகிறது?
விடை:
ஓர் அரசியல் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறுதல் :

  • இந்திய தேர்தல் ஆணையம் ஓர் அரசியல் கட்சியை மாநில (பிராந்திய) கட்சியாக அங்கீகரிப்பதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
  • மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தபட்சம் 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
  • 25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  • மாநில சட்டமன்ற மொத்த தொகுதிகளில் 3% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

Question 2.
‘ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு குறித்து விளக்குக.
விடை:
எதிர்க்கட்சி :

  • தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சி என அழைக்கப்படுகிறது.
  • மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியம். அது ஆளும் கட்சி போன்றே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
  • அது அரசாங்கத்தின் கொள்கைகள், அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்களை தீவிரமாக விமர்சிக்கும்.
  • எதிர்க்கட்சி, அரசின் தவறான கொள்கைகள் மற்றும் தோல்விகளை வெளிப்படுத்தும். ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும்.
  • எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.

Question 3.
வேறுபடுத்துக: தேசியக்கட்சி மற்றும் பிராந்தியக் கட்சி. தேசியக் கட்சி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 4

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 5