Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

7th Science Guide அன்றாட வாழ்வில் விலங்குகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக

Question 1.
…………………….. தினசரி, கால்நடைகளிலிருந்து நமக்குக்கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
அ) முட்டை
ஆ) பால்
இ) இவை இரண்டும்
ஈ) இவை எதுவும் அல்ல
விடை:
ஆ) பால்

Question 2.
முட்டையில் ………………………. அதிகம் உள்ளது.
அ) புரதம்
ஆ) கார்போ ஹைட்ரேட்
இ) கொழுப்பு
ஈ) அமிலம்
விடை:
அ) புரதம்

Question 3.
வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எந்த பாகம் ………………….. ஆடைகள் தயாரிக்க உதவுகிறது?
அ) கால்
ஆ) கை
இ) உரோமம்
ஈ) தலை
விடை:
இ) உரோமம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது …………………
அ) ஹார்ட்டிகல்சர்
ஆ) ஃபுளோரிகல்சர்
இ) அக்ரிகல்சர்
ஈ) செரிகல்சர்
விடை:
ஈ) செரிகல்சர்

Question 5.
பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது ………………………
அ) ஆஸ்துமா
ஆ) ஆந்தராக்ஸ்
இ) டைஃபாய்டு
ஈ) காலரா
விடை:
ஆ) ஆந்தராக்ஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
புரதம் மற்றும் ……….. பாலில் அதிகம் உள்ளது.
விடை:
கால்சியம்

Question 2.
தேன் கூட்டிலிருந்து …………….. எடுக்கப்படுகிறது.
விடை:
தேன்

Question 3.
ஆந்தராக்ஸ் நோயை உண்டாக்குவது. …………..
விடை:
பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்

Question 4.
இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை …………………
விடை:
பட்டு

Question 5.
அமைதிப்பட்டு ………….. ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
விடை:
1992

III. சரியா, தவறா? தவறெனில் சரியானதை எழுதவும்

Question 1.
இயற்கையின் மிகப் பெரிய கொடை
விடை:
சரி

Question 2.
குதிரையின் உரோமம் ஓவியம் தீட்டும் தூரிகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
சரி

Question 3.
பட்டுப்பூச்சி கம்பளி இழைகளைத் தருகிறது.
சரியான ஆடு கம்பளி இழைகளைத் தருகிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
அஹிம்சைப் பட்டின் மறுபெயர் மல்பெரி பட்டு
சரியான விடை : அஹிம்சைப் பட்டின் மறுபெயர் அமைதிப்பட்டு.
விடை:
தவறு

Question 5.
ஆந்த்ராக்ஸைக் குணப்படுத்தும் சிறந்த மருந்து பெனிசிலின்
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 2

V. ஒப்புமை

Question 1.
நீர் : குழாய் :: மின்சாரம் : ………………..
விடை:
மின்கம்பி

Question 2.
தாமிரம் : கடத்தி :: கட்டை : ……………..
விடை:
மின்கடத்தாப்பொருள்

Question 3.
நீளம் : மீட்டர் அளவு :: மின்சாரம்:
விடை:
அம்மீட்டர்

Question 4.
மில்லி அம்பியர் : மைக்ரோ அம்பியர் :: 10-3A :
விடை:
10-6A

VI. மிகக் குறுகிய விடை தருக

Question 1.
பாலிலிருந்து கிடைக்கும் பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
விடை:
1) தயிர்
2) நெய்

Question 2.
விலங்குகளிடமிருந்து கிடைக்கும் இரு வகையான இழைகள் யாவை?
விடை:
1) கம்பளி இழைகள் 2) பட்டு

Question 3.
கத்தரித்தல் என்றால் என்ன?
விடை:

  • ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன.
  • உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும்.

Question 4.
ஆந்தராக்ஸ் நோயின் அறிகுறிகளை எழுதுக..
விடை:

  • காய்ச்சல்
  • இருமல்
  • மூச்சுவிடுதலில் சிரமம்
  • சில சமயம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு

Question 5.
செரிகல்சர் – வரையறுக்க
விடை:
பட்டுப்பூச்சிகளை வளர்த்து, அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவது, பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர் எனப்படும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 6.
நாம் விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்?
விடை:

  • நாம் விலங்குகளின் மீது அக்கறை, அன்பு கொண்டு அவற்றை பாதுகாக்க வேண்டும்.
  • விலங்குகளை நம் குடும்பத்திலுள்ள ஓர் உறுப்பினர் போல் பேணிகாக்க வேண்டும்.

Question 7.
அஹிம்சைப் பட்டைக் கண்டறிந்தவர் யார்?
விடை:
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர் 1992 ஆம் ஆண்டு அஹிம்சைப் பட்டினை கண்டறிந்தார்.

VII. குறுகிய விடை தருக.

Question 1.
கம்பளியின் சிறப்பம்சங்கள் மூன்றினை எழுதுக.
விடை:
கம்பளியின் சிறப்பம்சங்கள் :

  1. வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது மற்றும் இவை கிழிவதில்லை
  2. ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது
  3. கம்பளி, குளிருக்கு எதிராகச் செயல்படுகின்றது. எனவே கம்பளி சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது.
  4. இது எளிதில் சுருங்காது

Question 2.
பட்டின் ஏதேனும் மூன்று பயன்பாட்டை எழுதுக.
விடை:

  1. பட்டு இயற்கை அழகுடையது, கோடை காலத்தில் இது இதமானதாகவும், குளிர் காலத்தில் வெப்பத்தைத் தரக் கூடியதாகவும் உள்ளது.
  2. நாகரிகமான, நவீன உடைகளை அழகாகத் தயாரிக்கவும், சிறப்பு வாய்ந்த அழகிய பட்டாடைகளை வடிவமைக்கவும் முக்கியமாக சேலைகள் தயாரிக்க இது பயன்படுகிறது.
  3. பட்டு இழையானது, மருத்துவத் துறையில், அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Question 3.
கோழிப்பண்ணையில் காணப்படும் பொதுவான நோய்கள் யாவை?
விடை:

  1. சால்மோனெல் லோசிஸ் (வயிற்றுப்போக்கு)
  2. ரானிக் கெட் நோய் (அம்மை நோய்)
  3. ஆஸ்பர்ஜில்லஸ் நோய் (பலவீனம், நலிந்து போதல்)

VIII. விரிவான விடை தருக.

Question 1.
அஹிம்சை பட்டு பற்றி விவரிக்க?
விடை:
அஹிம்சைப் பட்டு :
இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர், 1992 ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களை அழிக்காமல் அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.

கூட்டுப்புழுக்கள், கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும் போது அவற்றைக் கொல்லாமல் அவை உண்டாக்கும் பட்டு இழைகளை எடுக்கலாம் என்றார்.

இந்தப் பட்டு மனித நேயத்தின் அடிப்படையில் பாரம்பரிய முறைகளைத் தாண்டி உருவாக்கப்பட்டதாகும்.

எனவே இது அகிம்சைப்பட்டு அல்லது அமைதிப்பட்டு என்று அழைக்கப்படுகின்றது.

Question 2.
பட்டாலைகளில் ஏற்படும் அபாயங்கள் யாவை?
விடை:

  • பொதுவாகப் பட்டாலைகளில் பணிபரிபவர்கள் நின்று கொண்டே பட்டுநூலை நூற்பதால் அவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள்.
  • மேலும் இவர்கள் முதுகு வலியினாலும், பார்வைக் கோளாறுகள் மற்றும் தோல் காயங்களாலும் துன்புறுகிறார்கள்.
  • குறைந்த காற்றோட்டமுள்ள பகுதிகளில் இவர்கள் பணிபுரிவதால் சில சமயம், சுவாச சம்பந்தமான நோய்களான ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் அவதிப்படுகிறார்கள்.
  • கம்பளி ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வெவ்வேறு வேதிப்பொருள்கள் மற்றும் சலவைத்தூள்களையும் பயன்படுத்துவதால் ஒவ்வொமை மற்றும் தோல் நோயால் துன்புறுகிறார்கள்.
  • இறந்த விலங்குகளைக் கையாளுவதால் கம்பளி ஆலை பணியாளர்கள் ஆந்தராக்ஸ் பாக்டீரியா தொற்றால் அவதிப்படுகிறார்கள்.
  • இது போன்ற பாதிப்பு ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படுகிறது. இது பிரித்தெடுப்போர்கள் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
  • விலங்குகளின் உரோமம் மற்றும் அங்கு வாழும் விலங்குகளைக் கையாளுவோர்க்கும் ஆந்தராக்ஸ் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

IX. பின்வரும் வினாக்களுக்குப் பதில் தருக.

கம்பளி ஆலை படம்
Question 1.
கம்பளி ஆலையில், கம்பளி தயாரிக்கப்படும் நிலைகளை எழுதுக.
விடை:
கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவை பின்வருமாறு.

  1. கத்தரித்தல்
  2. தரம் பிரித்தல்
  3. கழுவுதல்
  4. சிக்கெடுத்தல்
  5. நூற்றல்

1. கத்தரித்தல் :
ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன. உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும்.

2. தரம் பிரித்தல் :
ஒரேஆட்டின்வெவ்வேறுபாகங்களிலிருந்தும் எடுக்கப்படும் உரோமங்கள்வெவ்வேறானவை. இவை பின்னர் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்படும் இது தரம் பிரித்தல் எனப்படும்.

3. கழுவுதல் :
தோலில் இருந்து கத்தரித்த தோலின் உரோமங்கள் உள்ள தூசி, அழுக்கு மற்றும் எண்ணெய் பிசின் போன்றவற்றை நீக்க, அதைச் சலவைத்தூள் கொண்டு நன்கு கழுவ வேண்டும்.

4. சிக்கெடுத்தல் :
காய வைத்த கம்பளி இழைகளைக் கவனத்துடன் பிரிக்க வேண்டும். இதை, ஆலைகளில் உள்ள உருளைகளில் செலுத்தி, பின்னர் மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்ற வேண்டும். இப்படிக் கம்பளியைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும்.

5. நூற்றல் :
இந்த வலையைக் குறுகிய தனித்த இழையாக மாற்ற, அவற்றை நூற்பு இயந்திரங்களில் அனுப்ப வேண்டும். இந்த நூல், பின் பந்துபோல் உருண்டையாக மாறும் இந்த நூல் பந்து, பின் பின்னல்களாக மாற்றப்பட்டு, ஆடைகள் நெய்ய உதவும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 2.
கம்பளியின் பயன்களை எழுதுக.
விடை:
கம்பளியின் பயன்கள்:

  1. கம்பளி என்பது, பல்வேறு வகையான பொருள்கள் செய்ய உதவும் இழையாகும்.
  2. இந்த இழைகளின்விட்டம் ஆடைகள், வீட்டிற்குத் தேவையான பொருள்கள் செய்ய உதவுகின்றன.
  3. மூன்றில் இரண்டு பங்கு கம்பளி இழைகள், ஸ்வெட்டர், ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன.
  4. கம்பளி இழை மற்றும் இயற்கை அல்லது செயற்கை இழைகளோடு சேரும்போது அவை மடிப்புக்கு எதிர்ப்புத் தன்மை உடைய போர்வைகள் மற்றும் இரைச்சலை உறிஞ்சும் விரிப்புகள் தயாரிக்க உதவுகின்றன.

X. உயர் சிந்தனை வினா

Question 1.
பாராசூட் தயாரிக்க பட்டு இழைகள் உதவுகின்றன ஏன்?
விடை:

  • பட்டு ஓர் வலிமையான இயற்கை இழையாகும்.
  • இவை மெல்லிய எடைகுறைந்த மற்றும் எளிதில் தீப்பிடிக்காத தன்மை கொண்டதினால் இவை அதிகம் பாராசூட் தயாரிப்பில் உதவுகின்றன.

Question 2.
தேன் எல்லாருக்கும் சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது ஏன்? காரணம் தருக.
விடை:

  • தேன் மிகுந்த மருத்துவகுணம் கொண்ட மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகும்.
  • நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மைக் கொண்டது.
  • இது ஒரு இரத்தச் சுத்திகரிப்பானாக செயல்படுகிறது.
  • இது ஒரு ஆண்டி – ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன.

XI. கூற்றும், காரணமும்

Question 1.
கூற்று : விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.
காரணம் : ஆடு, யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் முயல் கம்பளி இழைகளைத் தருகின்றன.

அ) கூற்றும், காரணமும் சரி .
ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்றும், காரணமும் தவறு
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி

Question 2.
கூற்று : பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின்
காரணம் : இந்த மருந்துகள் பசு அம்மையைக் குணமாக்கும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் தவறு, காரணமும் தவறு
ஈ) கூற்றும் சரி, காரணமும் சரி
விடை:
அ) கூற்று சரி, காரணம் தவறு பகுதி

7th Science Guide அன்றாட வாழ்வில் விலங்குகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கீழ்கண்ட எந்த ஒன்று சிறந்த மருத்துவ குணம் மற்றும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது.
அ) பால்
ஆ) முட்டை
இ) தேன்
ஈ) இறைச்சி
விடை:
இ) தேன்

Question 2.
கம்பளி என்ற இழை பொதுவாக எந்த குடும்பவிலங்குகளின் மென்முடி கற்றைகளிலிருந்து பெறப்படுகிறது?
அ) லெப்ரோய்டே
ஆ) கேப்ரினே
இ) கேனிடே
ஈ) ஈகுய்டே
விடை:
ஆ) கேப்ரினே

Question 3.
தோலில் இருந்து கத்தரித்த தோலின் உரோமங்கள் அவற்றிலுள்ள நீ அழுக்குகளை எம்முறை மூலம் நீக்கப்படுகிறது?
அ) சிக்கெடுத்தல்
ஆ) நூற்றல்
இ) கத்தரித்தல்
ஈ) கழுவுதல்
விடை:
ஈ) கழுவுதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
ஒரு முதிர்ந்த பட்டுப்பூச்சி சுமார் எத்தனை முட்டைகளை ஒரே தடவையில் இடும்.
அ) 300
ஆ) 150 ம்
இ) 500
ஈ) 1000
விடை:
இ) 500

Question 5.
இளம் தேனீக்களுக்கு எந்த தேனீ உணவூட்டம் அளிக்கிறது?
அ) இராணித் தேனீ
ஆ) ஆண் தேனீ
இ) வேலைக்காரத் தேனீ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) வேலைக்காரத் தேனீ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஆறு கிராம் எடையுள்ள …………………….. உயர்த்தரகப் புதத்தைக் கொண்டுள்ளது
விடை:
முட்டை

Question 2.
இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழியினங்கள்………….. என்று அழைக்கப்படுகிறது
விடை:
பிராய்லர்

Question 3.
………………… ஐ கொதிநீரில் இட்டால், அதிலிருந்து பட்டு இழைகளை மிக எளிதாகச் சிக்கலின்றி பிரித்துவிடலாம்
விடை:
கூட்டுப்புழுக்கள்

Question 4.
பட்டுப்பூச்சிகள் ………………. நாட்கள் மல்பெரி இலைகளை உண்டு வாழும்.
விடை:
35

Question 5.
இந்தியா பட்டு உற்பத்தியில், உலகிலேயே …………………… இடத்தைப் பெறுகிறது.
விடை:
இரண்டாவது

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 3

IV. சரியா? தவறா? தவறெனில் சரியானதை எழுதவும்

Question 1.
பட்டாலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் பாதிக்கப்படுகின்றனர்.
விடை:
சரி

Question 2.
பட்டுப்புழுக்கள் இரண்டு வருட காலம் மட்டுமே உயிர்வாழும்.
சரியான விடை : பட்டுப்புழுக்கள் இரண்டு மாதம் மட்டுமே உயிர்வாழும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 3.
பட்டிலைகளை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவையாவன கத்தரித்தல்,
சரியான விடை : கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவையாவன கத்தரித்தல், தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல் போன்றவையாகும்.
விடை:
தவறு
தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல் போன்றவையாகும்.

Question 4.
பட்டு இழையானது மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
சரி

Question 5.
எந்த வயதினரும் தினமும் முட்டையை உண்பது நல்லது
விடை:
சரி

V. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாக வரிசைப்படுத்துக.

Question 1.
1. சிக்கெடுத்தல்
2. கழுவுதல்
3. கத்தரித்தல்
4. தரம் பிரித்தல்
5. நூற்றல்
விடை:
1. கத்தரித்தல்
2. தரம்பிரித்தல்
3. கழுவுதல்
4. சிக்கெடுத்தல்
5. நூற்றல்

Question 2.
1. கூட்டுப்புழு
2. லார்வா
3. வளர்ச்சியடைந்த பட்டுப்பூச்சி,
4. வளர்ந்து வரும் பட்டுப்பூச்சி
5. முட்டை
விடை:
1. முட்டை
2. லார்வா
3. கூட்டுப்புழு
4. வளர்ச்சியடைந்த பட்டுப் பூச்சி
5. வளர்ந்து வரும் பட்டுப்பூச்சி

VI. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : பட்டிழைகள் வலிமைவாய்ந்த செயற்கை இழைகளாகும்.
காரணம் : ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் 500 முட்டைகளை இடம்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

Question 2.
கூற்று : காலையில் புரதம் மிக்க உணவு, அன்றைய தினம் முழுவதும் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
காரணம் : முட்டையானது குறைந்த ஊட்டச்சத்தினையும் அதிக கொழுப்பினையும் கொண்ட உணவாகும்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று சரி காரணம் தவறு

VII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
கோழி வளர்ப்பின் இரண்டு வகைகள் யாவை?
விடை:

  1. முட்டையிடுபவை
  2. பிராய்லர்

Question 2.
ஆட்டினைத்தவிர மற்ற எந்தெந்த பாலூட்டிகளிலிருந்து கம்பளி இழைகள் பெறப்படுகின்றன?
விடை:

  • முயல்
  • யாக்
  • அல்பாகா
  • ஒட்டகம்
  • காட்டெருமை

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 3.
தமிழ்நாட்டில் பட்டு உற்பத்தியில் புகழ்பெற்ற நகரங்கள் எது?
விடை:

  • காஞ்சிபுரம்
  • திருப்புவனம்
  • ஆரணி

Question 4.
எவ்வாறு கோழியிணங்களை அவற்றை தாக்கும் பொதுவான தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்?
விடை:

  • கோழிகள் வாழுமிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • கோழிகளுக்குத் தடுப்பு போட வேண்டும்.

Question 5.
பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உயிரினங்கள் சிலவற்றை பட்டியலிடுக.
விடை:

  • பசுமாடுகள்
  • எருமை மாடுகள்
  • ஆடுகள்
  • ஒட்டகம்

VIII. குறுகிய விடையளி

Question 1.
கோழிப் பண்ணை அமைத்தலுக்கு தேவைப்படும் பல்வேறு அடிப்படை காரணிகள் யாவை?
விடை:

  • போதுமான மற்றும் பாதுகாப்பான இடம்
  • தேவையான அளவு தண்ணீர் வசதி
  • காற்றோட்டமான பகுதி
  • தேவையான அளவு உணவு

Question 2.
சிக்கெடுத்தல் என்றால் என்ன?
விடை:

  1. காய வைத்த கம்பளி இழைகளைக் கவனத்துடன் பிரிக்க வேண்டும்.
  2. இதை ஆலைகளில் உள்ள உருளைகளில் செலுத்தி பின்னர் மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்ற வேண்டும்.
  3. இவ்வாறு கம்பளியைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும்.

Question 3.
பட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் ஆந்தராக்ஸ் நோயின் நோய்க்காரணி பரவுதல் மற்றும் அறிகுறிகளை எழுதுக.
விடை:

  • ஆந்தராக்ஸ் நோய் பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டிரியாவினால் ஏற்படுகிறது.
  • விலங்குகளின் உரோமம் மற்றும் அங்கு வாழும் விலங்குகளைக் கையாளுவோர்க்கும் ஏற்படுகிறது.
  • காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம், வாந்தி எடுத்தல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றன.

Question 4.
பால் நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
விடை:
பாலானது தேநீர், காஃபி, ஐஸ்கிரீம், சாக்கலேட் இனிப்பு மற்றும் இவை போன்ற பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, பாலேடு, வெண்ணெய், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க உதவுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 5.
வேலைக்காரத் தேனீயின் பணிகள் யாவை?
விடை:

  • மலர்களில் உள்ள தேனைச் சேகரிப்பது
  • இளந்தேனீக்களை வளர்ப்பது.
  • தேன் கூடு சேதம் அடைந்தால் அதைச் சரி செய்வது.
  • தேன் கூட்டினை பாதுகாப்பது போன்றவையாகும்.

Question 6.
எந்த அமைச்சகம் விலங்குகளைத்துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்க 1960 ஆம் ஆண்டு நான்கு புதிய சட்டங்களைக் கொண்டுள்ளது. இது யாருக்காக உருவாக்கப்பட்டது?
விடை:

  • நமது சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்ப வெப்பநிலை மற்றும் மாற்ற சார்ந்த அமைச்சகம்.
  • இது வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், விலங்குகளை சந்தையில் விற்பவர்கள், செல்லப் பிராணிகள் மற்றும் மீன் வளர்ப்பவர்கள் போன்றவர்களுக்காக உருவாக்கியது.

IX. விரிவாக விடையளி

Question 1.
பால் மற்றும் இறைச்சி எவ்வாறு மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
பால் :

  • நாம் பயன்படுத்தப்படும் பாலானது பசு, எருமை மாடுகள் மற்றும் ஆடுகளிலிருந்து கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
  • நம் அன்றாட உணவில் பாலானது தேநீர், காஃபி, ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்பு மற்றும் இவை போன்ற பால் சம்பந்தமான பொருள்களைத் தயாரிக்க உதவுகிறது.
  • புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, பாலேடு, வெண்ணெய், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க பால் உதவுகிறது.

இறைச்சி :

  • விலங்குகளின் இறைச்சி சிலருக்கு உணவாகப் பயன்படுகிறது.
  • இறைச்சியில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அது முக்கிய உணவாகப் பயன்படுகிறது.

Question 2.
பட்டின் சிறப்பம்சங்களை வரிசைப்படுத்துக.
விடை:

  • கவர்ச்சியாகவும் மிகவும் மென்மையாக அணிவதற்கு வசதியானது. பல துறைகளில் பயன்படுகிறது.
  • இதை எளிதில் சாயமேற்றலாம்
  • இயற்கை இழைகளிலேயே பட்டு இழை தான் வலிமையான இழையாகும்.
  • இது சூரிய ஒளியை எளிதில் கடத்தும்.

Question 4.
கம்பளி தொழிளாலர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை (அ) தடுக்கும் முறைகளைப் பற்றி எழுதுக.
விடை:

  1. பெனிசிலின் மற்றும் சிங்ரோஃப்ளோக்சாசின் போன்ற சிறந்த மருந்துகள் ஆந்த்ராக்ஸ் நோயைக் குணமாக்க உதவுகின்றன.
  2. விலங்குகளுக்கு அந்தராக்ஸ் தடுப்பூசி போட வேண்டும் மற்றும் ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்த விலங்குகளை இழ்தழி தோண்டி அதில் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்
  3. முதலாளிகள் தங்களின் பணியாளர்களுக்குச் சுத்தமான சுற்றுச்சூழலும் நல்ல காற்றோட்டம் மற்றும் பாதுகாப்பாக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
தேனில் உள்ள கலப்படத்தை எவ்வாறு அறிவாய்? சோதனையுடன் விளக்குக.
விடை:
தேவையான பொருட்கள் : நீர் மற்றும் தேன்
செய்முறை :
ஒரு குவளையில் நீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு துளி தேனை ஊற்றவும் பின் அதைக் கவனித்துப் பாருங்கள்.

அறிவன :
நீரில் இடப்பட்ட ஒரு துளித் தேன் கரையாமல் பாத்திரத்தின் அடிப்பகுதி வரை சென்றால் அது சுத்தமான தேன் பாத்திரத்தின் அடிப்பகுதியை அடையும் முன்னரே அது கரைந்தால் அது சுத்தமான தேன் இல்லை.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 4