Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 3 பலபடி வேதியியல் Questions and Answers, Notes.
TN Board 7th Science Solutions Term 3 Chapter 3 பலபடி வேதியியல்
7th Science Guide பலபடி வேதியியல் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை ………….. ஆகும்.
அ) நைலான்
ஆ) பாலியஸ்டர்
இ) ரேயான்
ஈ) பஞ்சு
விடை:
அ) நைலான்
Question 2.
வலுவான இழை ……………………… ஆகும்.
அ) ரேயான்
ஆ) நைலான்
இ) அக்ரிலிக்
ஈ) பாலியஸ்டர்
விடை:
ஆ) நைலான்
Question 3.
ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை ……………….
அ) உருகும்
ஆ) எரிதல்
இ) ஒன்றும் ஏற்படுவதில்லை
ஈ) வெடித்தல்
விடை:
ஆ) எரிதல்
Question 4.
கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை ……………. ஆகும்.
அ) நைலான்
ஆ) பாலியெஸ்டர்
இ) அக்ரிலிக்
ஈ) PVC
விடை:
இ) அக்ரிலிக்
Question 5.
நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது ………………….. என்ற பயன்பாட்டில் அறியலாம்.
அ) இரத்தப்பைகள்
ஆ) நெகிழிக் கருவிகள்
இ) நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்
ஈ) நெகிழி கேரி பைகள்
விடை:
அ) இரத்தப்பைகள்
Question 6.
……………….. என்பது மட்கும் தன்மையற்ற ஒரு பொருள்
அ) காகிதம் .
ஆ) நெகிழி புட்டி
இ) பருத்தி துணி
ஈ) கம்பளி
விடை:
ஆ) நெகிழி புட்டி
Question 7.
PET என்பது …………………….. இன் சுருக்கெழுத்தாகும்.
அ) பாலியெஸ்டர்
ஆ) பாலியெஸ்டர் மற்றும் டெரிலின்
இ) பாலி எத்திலின்டெரிப்தாலேட்
ஈ) பாலித்தின்டெரிலின்
விடை:
இ) பாலி எத்திலின்டெரிப்தாலேட்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
………………….. என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
PET
Question 2.
பல்வகை நெகிழிகளை இனம்காண ………… பயன்படுகின்றன.
விடை:
ரெசின் குறியீடு
Question 3.
சிறிய அலகுகளான பல ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் …………… ஆகும்.
விடை:
பலபடி
Question 4.
முழுமையான இயற்கை இழையின் எடுத்துக்காட்டு ……………… ஆகும்.
விடை:
பருத்தி
Question 5.
கக்கூன்களைக் கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழை …………………… என்று பெயர்.
விடை:
பட்டு
III. சரியா தவறா
Question 1.
அதிக அளவிலான நெகிழிகள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன
விடை:
சரி
Question 2.
மறுத்தல் (தவிர்த்தல்) என்பது நெகிழியைக் கையாளும் சிறந்த முறையாகும்.
விடை:
சரி
Question 3.
செயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்ததே.
சரியான விடை : இயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்தது.
விடை:
தவறு
Question 4.
வீரியம் குறைந்த நெகிழிகள் சிதைந்து மைக்ரோநெகிழிகள் என்ற சிறிய துகள்களாகும்
விடை:
சரி
Question 5.
பருத்தி என்பது ஓர் இயற்கையான பாலிமர் ஆகும்
விடை:
சரி
IV. பொருத்துக.
விடை:
V. சரியான வரிசையில் எழுதுக
1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.
2. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிரவைக்கவும்.
3. ஒரு குவனை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.
4. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
5. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம். .
6. அந்த ஜெல்லினை அலுமனியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.
விடை:
1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.
2. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
3. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்து விடலாம்.
4. அந்த ஜெல்லினை அலுமினியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.
5. ஒரு குவளை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.
6. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணிநேரம் குளிர வைக்கவும்.
VI. ஒப்புமை தருக.
Question 1.
பருத்தி : இயற்கை : பாலியெஸ்டர் : ………………………
விடை:
செயற்கை
Question 2.
PLA கரண்டி : மட்கும் தன்மை :: நெகிழி ஸ்பூன் : ……………………
விடை:
மட்காத் தன்மை
Question 3.
நைலான் : வெப்பத்தால் உருகும் : பட்டு : …………………..
விடை:
எரியும்
VII. வாக்கியம் மற்றும் காரணம்
Question 1.
வாக்கியம் : மண்ணில் புதைக்கப்பட்ட காய்கறித் தோல்கள் இரு வாரங்களில் மறைந்து போகின்றன.
காரணம் : காய்கறித் தோல்கள் மட்கும் தன்மை கொண்டவை
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.
Question 2.
வாக்கியம் : நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும். ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாதகாலம் போதுமானது.
காரணம் : நைலான் பெட்ரோலிய வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிருப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது.
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.
Question 3.
வாக்கியம் : நெகிழி பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
காரணம் : நெகிழிகள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.
VIII. குறுக்கெழுத்து
இடமிருந்து வலம்
1. செயற்கை கம்பளியாகப் பயன்படும் இழை
2. நீர் பாட்டில்கள் உருவாக்கத் தேவைப்படும் நெகிழி
கீழிருந்து மேல்
3. குறை – செயற்கை இழையான இதற்கு செயற்கைப்பட்டு என்ற பெயரும் உண்டு
4. சிறிய ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சேர்க்கை உருவாக்கும் நீண்ட சங்கிலிப் பொருள்
மேலிருந்து கீழ்
5. கூட்டிலிருந்து பெறப்படும் ஒரு வகையான இயற்கை இழை.
6. பாலியெஸ்டர் என வகைப்படுத்தப்படும் ஓர் செயற்கை இழை
7. கயிறு தயாரிப்பில் பயன்படும் பலபடி
விடை:
1. அக்ரிலிக்
2. பாலி எத்திலின் டெரிப்தாலேட் (PET)
3. பாலிமர்
4. ரேயான்
5. பட்டு
6. அக்ரிலிக்
7. நைலான்
IX. மிகக் குறுகிய விடை தருக.
Question 1.
பருத்தியை உருவாக்கும் பலபடிகளின் இரசாயனப் பெயர் என்ன?
விடை:
செல்லுலோஸ்
Question 2.
நெகிழிபொருள்கள் வெவ்வேறு பண்புகளையும்குணங்களையும் எங்ஙனம் பெறுகின்றன
விடை:
- குறைந்த எடை
- அதிக வலிமை
- சிக்கலான பல வடிவங்களை எடுக்கும் தன்மை
- இளகும் தன்மை நீரினை உட்புகவிடாத தன்மை
- புற ஊதாக் கதிர்களை உட்புக விடாத தன்மை
Question 3.
நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பது நல்லதல்ல, ஏன்?
விடை:
- நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பதால் நச்சுத்தன்மையுள்ள வாயுக்களும் வேதிப் பொருட்களும் உருவாகின்றன.
- இவை புற்றுநோய் மற்றும் தீங்கு விளைவிக்கும் பல நோய்களை உருவாக்கும்.
Question 4.
நெகிழியினால் செய்த வாளியானது துருப்பிடிப்பதில்லை. ஆனால் இரும்பு வான துருப்பிடித்து விடுகிறது ஏன்?
விடை:
- இரும்பு வாளி காற்றுடன் வினைபுரிவதால் துருப்பிடிக்கிறது.
- ஆனால் நெகிழியினால் செய்த வாளியானது காற்றுடன் வினைபுரிவதில்லை, எனவே அது துருப்பிடிப்பதில்லை .
Question 5.
நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது எவ்வாறு சிறந்த முறையாகும்?
விடை:
- ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய நெகிழிகள் நமது சுற்றுப்புறத்திற்கும் விலங்குகளுக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் தீவிர தாக்கங்களையே ஏற்படுத்த வருகின்றன.
- நெகிழி சிதைவடைவதும் இல்லை, மண்ணில் மட்குவதும் இல்லை.
- ‘நெகிழி குப்பைகள் பல காலம் மறையாமல் இருப்பதால், எல்லா இடங்களிலும் நிறைந்து குவிந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.
- விலங்குகள் நெகிழிப்பைகளில் உள்ள உணவுடன் சேர்த்து நெகிழிப்பைகளையும் தவறுதலாக உண்பதால் அவற்றிற்கு கேடு விளைகிறது.
- கடல் நீரில் குவியும் நெகிழிகள் சிறிய துண்டுகளாக மைக்ரோ நெகிழிகளாக உடைந்து கடலை மாசுபடுத்துகின்றன.
- எனவே நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது சிறந்த முறையாகும்.
Question 6.
வெப்பத்தால் இறுகும் நெகிழிப் பொருள்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
- பேக்கலைட்
- மெல்மின்
Question 7.
5R கொள்கை என்பது என்ன?
விடை:
- 5R கொள்கை என்பது
- Refuse (தவிர்) – Reduce (குறை)
- Reuse (மீண்டும் பயன்படுத்து)
- Recycle (மறுசுழற்சி செய்)
- Recover (மீட்டெடு)
X. சிறுவினா
Question 1.
‘மட்கும் தன்மை வாய்ந்தவை’ என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை:
இயற்கை செயல்முறைகளாலும், பாக்டீரியாக்களினாலும் சிதைவடையும் பொருள்கள் மட்கும் தன்மை வாய்ந்தவை எனப்படும்.
Question 2.
கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது அணிய ஏதுவான ஆடைவகை யாது? ஏன்?
விடை:
- கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது இயற்கை இழைகளாலான ஆடைவகைகளை அணிய வேண்டும்.
- ஏனெனில் இயற்கை இழைகள் அதிக அளவு நீரை உறிஞ்சுகின்றன.
- அதிக அளவு காற்றோட்டம் உள்ளதால் உடலை குளிர்ச்சியாகவும், சிரமமின்றியும் வைத்துக்கொள்ள இயற்கை இழைகள் உதவுகின்றன.
Question 3.
விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் நெகிழியின் தாக்கம் என்ன?
விடை:
நெகிழிப் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை உண்ணும்போது விலங்குகள் தவறுதலாக நெகிழி பைகளையும் சேர்த்தே உண்கின்றன. இது விலங்குகளுக்கு கேடு விளைவிக்கின்றன.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய பாலித்தீன் பைகள் சுற்றுப்புறத்தை குப்பை கூடமாக்கி, வடிகால்களை அடைத்து மாசுபடுத்துகின்றன.
வடிகால்களில் அடைப்பு ஏற்படுவதால் நீர் தேங்கி நிற்கின்றது.
இது கொசுக்களின் இனப் பெருக்கத்திற்கு காரணமாகி மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற வியாதிகளை பரப்பி, வெள்ளம் ஏற்படவும் காரணமாகிறது.
XI. நெடுவினா
Question 1.
செயற்கை இழைகளின் பயன்களையும், வரம்புகளையும் பட்டியலிடுக.
விடை:
செயற்கை இழைகளின் சிறப்புகள் :
- நிறம் மங்குவது இல்லை . ‘
- சுருங்குவது இல்லை
- அதிக வருடங்களுக்கு அதே பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
- அதிக வலிமை உடையது.
- அதிக நீட்சித்தன்மை கொண்டது.
செயற்கை இழைகளான் குறைபாடுகள் :
- வெப்பத்தைத் தாங்கும் திறனற்றவை.
- எளிதில் தீப்பற்றக் கூடியவை.
- குறைந்த அளவே நீரை உறிஞ்சுகின்றன.
- போதுமான காற்றோட்டத்தைத் தருவதில்லை. எனவே இவற்றை அணியும்போது வெப்பமாகவும், சிரமமாகவும் உணர்கிறோம்.
Question 2.
நெகிழிப்பொருள்களை அகற்றும் பாதுகாப்பான முறைகள் சிலவற்றினை பரிந்துரைக்கவும்.
விடை:
- நெகிழிப் பொருள்களை அகற்றும் போது மட்கும் தன்மை கொண்டவை, மட்கும் தன் தன்மையற்றவை என பிரித்த பிறகு அப்புறப்படுத்துவது சிறந்தது.
- நெகிழிக் குப்பைகளை அகற்ற 5R – கொள்கையை முயற்சிக்க வேண்டும்.
- Refuse (தவிர்த்த ல்)
கடைகளுக்குச் செல்லும்போது பருத்தியினாலான பை அல்லது சணல் பைகளை கொண்டு சென்று கடைக்காரர் தரும் நெகிழிப் பைகளை தவிர்க்கலாம். - Reduce (குறைத்தல்)
பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். நெகிழிப் பொருளை வாங்குமுன் அதற்கு பதிலிப் பொருள் உள்ளதா என சரிபார்த்தபின் வாங்கலாம். - Reuse (மீண்டும் பயன்படுத்துதல்)
நெகிழியினால் செய்யப்பட்ட பொருள்களை தூக்கியெறியாமல் முடிந்த அளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். - Recycle (மறுசுழற்சி செய்தல்)
பயனற்ற பொருள்களில் இருந்து பயனுள்ள புதிய பொருள்களை உற்பத்தி செய்யும் பொருட்டு, ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் நெகிழிக் கழிவுகளை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யலாம். - Recover (மீட்டெடுத்தல், மட்குதல் மற்றும் எரித்துச் சாம்பலாக்குதல்)
நெகிழிப் பொருள்களை சாம்பலாக்கிகளில் இட்டு உயர் வெப்பநிலையில் எரித்து வெளியாகும் வாயுக்களைக் கவனமாக சேகரித்தும், மீதமான நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை கவனமாகப் பிரித்தும் மின்சார சக்தி பெறலாம். - அதிக இது பெரும்பாலும் நெகிழிக் கழிவுகளைக் கையாள்வதற்கு சாதகமான வழியாகக் கருதப்படுகிறது.
XII. உயர் சிந்தனைத் திறன் வினாக்கள்
Question 1.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கியெறிப்படும் நெகிழிகளைத் தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. அரசின் இந்தச் செயல்பாடு எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
விடை:
- இதனால் சுற்றுச்சூழல், விலங்குகள், நமது ஆரோக்கியத்தின் மீது நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
- நெகிழிகுப்பைகள் சேர்ந்து சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதும், நீர்நிலைகளில் அடைப்பு ஏற்படுவதும் குறைகிறது.
- இதனால் கொசுக்களால் ஏற்படும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
Question 2.
நெகிழிப் பைகள் சிதைவடைய ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஆகும் என நாம் அறிவோம். ஒரு தலைமுறை மாற 30 ஆண்டுகள் ஆகும். எனில், அந்த நெகிழிப்பை மட்குவதற்கு எத்தனை தலைமுறைகள் தேவைப்படும்.
விடை:
அந்த நெகிழிப்பை மட்குவதற்கு 16 தலைமுறைகள் தேவைப்படும்.
XIII. பதில் எழுதுக.
Question 1.
நாம் பயன்படுத்தும் பொருள்கள் எது?
விடை:
நெகிழி பாட்டில்கள், தட்டுகள், டம்ளர்கள், கொள்கலன்கள், உடுத்தும் ஆடைகள்
Question 2.
இன்று காலை உங்கள் கைகளில் பட்ட முதல் நெகிழிப் பொருள் என்ன?
விடை:
பல் துலக்கும் பிரஷ்
Question 3.
உங்கள் வகுப்பறையை பார்வையிட்டு அதில் காணப்படும் நெகிழியால் ஆன பொருள்களைப் பட்டியலிடுக..
விடை:
நாற்காலி, பேனா, பென்சில் டப்பா, ஸ்கேல்
Question 4.
உங்கள் மதிய உணவை எடுத்துச் செல்வதற்கும், தண்ணீரை எடுத்துச் செல்வதற்கும் நீங்கள் பயன்படுத்தும் பொருள்களின் வகைகள் யாவை?
விடை:
- மதிய உணவுக்கலன் – பாலி கார்பனேட் (PC)
- தண்ணீரை எடுத்துச்செல்லும் பாட்டில் – பாலி கார்பனேட் (PC), PET.
Question 5.
உங்களிடம் உள்ள துணிகளின் வகைகளைப் பட்டியலிடுக.
விடை:
நைலான், பாலியெஸ்டர், பருத்தி, பட்டு
XIV. கோடிட்ட இடங்களை நிரப்புக.
i)
விடை:
ii) கொடுக்கப்பட்டுள்ள படத்தினை உற்றுநோக்கி என்ன நடக்கிறது என்பதை விளக்குங்கள்.
விடை:
- ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியினாலான பாட்டில்கள், கேன்கள் வடிகாலை அடைத்து நீரை வடியவிடாமல் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது.
- தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் பெருகி மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
- கழிவு நீர் தேங்குவதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்குகிறது.
iii) கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்து, அவற்றை வரைபடத்தில் குறிக்கவும், நாடுகளையும் அவை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் அளவையும் ஒப்பிடுக.
விடை:
7th Science Guide பலபடி வேதியியல் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
PVC – ன் ஒற்றைப்படி மூலக்கூறு.
விடை:
Question 2.
புரதங்கள் எவற்றின் பலபடிகள்?
அ) ஆல்கஹால்கள்
ஆ) அமினோ அமிலங்கள்
இ) கார்போஹைட்ரேட்கள்
ஈ) நொதிகள்
விடை:
ஆ) அமினோ
Question 3.
அமிலங்கள் பின்வருவனவற்றுள் எது இயற்கை இழை?
அ) நைலான்
ஆ) ரேயான்
இ) பருத்தி
ஈ) அக்ரிலிக்
விடை:
இ) பருத்தி
Question 4.
பாதுகாப்பான நெகிழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவது
அ) PET
ஆ) HDPE
இ) PVC
ஈ) PS
விடை:
ஆ) HDPE
Question 5.
கால்பந்து ஆடுகளம் அமைக்கப் பயன்படுவது
அ) LDPE
ஆ) HDPE
இ) PVC
ஈ) PET
விடை:
அ) LDPE
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
பல எண்ணிக்கையிலான …………………… சக பிணைப்புகளால் இணைந்து உருவாக்கும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பு பலபடி எனப்படும்.
விடை:
ஒற்றைப்படிகள்
Question 2.
செல்லுலோஸ் ஒரு ……………………… பலபடியாகும்.
விடை:
கார்போஹைட்ரேட்
Question 3.
அக்ரிலிக் ஒரு ……………… இழையாகும்.
விடை:
செயற்கை
Question 4.
PET என்பது. ………………… சுருக்கம்
விடை:
பாலி எத்திலீன் டெரிதாலேட்
Question 5.
பாலித்தீன் ஒரு ……………… பிளாஸ்டிக்
விடை:
வெப்பத்தால் இளகும்
III. சரியா? தவறா? (தவறெனில் சரியான கூற்றைத் தருக)
Question 1.
டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, ஹீமோகுளோபின், நொதிகள் மற்றும் ஹார்மோன்கள் ஆகியன நமது உடலில் காணப்படும் பலபடிகள் ஆகும்.
விடை:
சரி
Question 2.
நண்டுகள் மற்றும் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் புற எலும்புக்கூடுகளிலும், காளான்கள் போன்ற பூஞ்சைகளின் செல் சுவர்களிலும் காணப்படுவது செல்லுலோஸ் ஆகும்.
விடை:
தவறு – நண்டுகள் மற்றும் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் புற எலும்புக்கூடுகளிலும், காளான்கள் போன்ற பூஞ்சைகளின் செல் சுவர்களிலும் காணப்படுவது கைட்டின் ஆகும்.
Question 3.
கம்பளி மற்றும் பட்டு ஆகியன செயற்கை இழைகளாகும்.
விடை:
தவறு – கம்பளி மற்றும் பட்டு ஆகியன இயற்கை இழைகளாகும்.
Question 4.
பாலியெஸ்டரை மிக மெல்லிய இழைகளாக இழுத்து, மற்ற நூல்களை நெய்வது போல் நெய்ய முடியும்.
விடை:
சரி
Question 5.
வெப்பத்தால் இறுகும் நெகிழிகள் வெப்பப்படுத்தும்போது வளைகின்றன.
விடை:
தவறு – வெப்பத்தால் இறுகும் நெகிழிகள் வெப்பப்படுத்தும் போது வளைவதில்லை.
IV. பொருத்துக.
V. சரியான வரிசையில் எழுதவும்
Question 1.
சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் டை சல்பைடு போன்ற வேதிப்பொருட்களுடன் விஸ்கோஸ் கரைந்து செல்லுலோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது.
விடை:
சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் டை சல்பைடு போன்ற வேதிப் பொருட்களுடன் செல்லுலோஸ் கரைந்து விஸ்கோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது.
Question 2.
கோடைக் காலங்களில், இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதைவிட செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதே பொருத்தமாக இருக்கும்.
விடை:
கோடைக்காலங்களில், செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதைவிட இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதே பொருத்தமாக இருக்கும்.
VI. ஒப்புமை தருக.
Question 1.
மட்கும் தன்மையற்ற நெகிழி : PVC
மட்கும் தன்மை கொண்ட நெகிழி ………………..
விடை:
PLA
Question 2.
பாலி கார்பனேட் : PU
……………… . PC
விடை:
பாலியூரித்தேன்
VII. கூற்று மற்றும் காரணம்
Question 1.
கூற்று (A): அக்ரிலிக் மற்றும் நைலான் ஆகியன செயற்கை இழைகளாகும்.
காரணம் (R): அவை பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட மூலப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.
Question 2.
கூற்று (A): பாலிபுரோபைலீன் உறிஞ்சு குழாய்களை நோய்தொற்று நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
காரணம் (R): அவை உயர்தரமான சுகாதாரத்தை வழங்குவதோடு நோய்கள் பரவும் அபாயத்தையும் முற்றிலும் அகற்றுகின்றன.
அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
சரியான கூற்று (A): பாலிபுரோபைலீன் உறிஞ்சு குழாய்களை நோய் தொற்று நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தத் தேவையில்லை.
VIII. மிகக் குறுகிய விடையளி
Question 1.
பலபடியாக்கல் என்றால் என்ன?
விடை:
பல எண்ணிக்கையிலான ஒற்றைப்படிகள் சகப்பிணைப்புகளால் இணைந்து பலபடி எனப்படும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பை உருவாக்கும் முறை பலபடியாக்கல் எனப்படும்.
Question 2.
செயற்கை பலபடிகள் என்றால் என்ன?
விடை:
- மனிதனால் உருவாக்கப்பட்ட பலபடிகள் செயற்கை பலபடிகள் எனப்படும்.
- அவை பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகின்றன.
Question 3.
ரேயான் என்றால் என்ன?
விடை:
- ரேயான் ஒரு பகுதியான செயற்கை இழை ஆகும்.
- மரக்கூழில் இருந்து பெறப்பட்ட செல்லுலோசினால் ரேயான் தயாரிக்கப்படுகிறது.
Question 4.
நைலானின் ஒற்றைப்படி மூலக்கூறுகள் யாவை?
விடை:
ஹெக்சா மெத்திலீன் டை அமீன் மற்றும் அடிப்பிக் அமிலம்.
Question 5.
ரெசின் குறியீடு என்றால் என்ன?
விடை:
ஒன்றையொன்று துரத்தும் அம்புக்குறியினாலான முக்கோணத்தின் நடுவில் ஓர் எண்ணும், அதற்குகீழ் அந்த எண்ணிற்குரிய நெகிழியின் பெயரின் சுருக்கெழுத்தும் சேர்ந்து காணப்படுவது ரெசின் குறியீடு எனப்படும்.
IX. குறுகிய விடையளி
Question 1.
இழைகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
விடை:
- நீண்ட மூலக்கூறுகள் பின்னிப் பிணைந்து நீளமான, சரம் போன்று உருவாக்கப்படும் அமைப்பு இழைகள் எனப்படும்.
- இயற்கை இழைகள் :
இவை தாவரங்கள் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படுகின்றன. (எ.கா) கம்பளி, பட்டு, பருத்தி - பகுதியான செயற்கை இழைகள் :
இயற்கையில் கிடைக்கும் மரக்கூழில் இருந்து மனிதனால் செயற்கையாக பெறப்படுபவை. (எ.கா) ரேயான். - செயற்கை இழைகள் :
பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு மனிதனால் உருவாக்கப்படுபவை. (எ.கா) நைலான்.
Question 2.
பாலியெஸ்டர் பற்றி குறிப்பு வரைக.
விடை:
- பாலியெஸ்டர் ஒரு செயற்கை இழையாகும்.
- இதனை மிக மெல்லிய இழைகளாக இழுத்து, மற்ற நூல்களை நெய்வது போல், நெய்யவும் முடியும்.
- இது பாலிகாட், பாலிவுல், டெரிகாட் போன்ற பல பெயர்களால் விற்பனை செய்யப்படுகிறது.
- பாலிகாட் என்பது பாலியெஸ்டர் மற்றும் பருத்தியின் கலவை.
- பாலிவுல் என்பது பாலியெஸ்டர் மற்றும் கம்பளியின் கலவை.
- பாலி எத்திலீன் டெரிதாலேட் (PET) ஒரு பிரபலமான பாலியெஸ்டர் வகையாகும்.
- PET நீர் மற்றும் சோடா பாட்டில்கள், கலன்கள், படங்கள், இழைகள் தயாரிக்க பயன்படுகிறது.
- பாலியெஸ்டர் துணிகள் எளிதில் சுருங்குவதில்லை.
- பாலியெஸ்டர் துணிகளை தோய்ப்பது எளிது.
- எனவே பலவகையான ஆடைகள் தயாரிப்பில் பாலியெஸ்டர் இழைகள் பயன்படுகின்றன.
Question 3.
அக்ரிலிக் பற்றி எழுதுக.
விடை:
- நாம் பயன்படுத்தும் ஸ்வெட்டர்கள், சால்வைகள் மற்றும் போர்வைகள் கம்பளியைப் போல் தோற்றமளித்தாலும், அவை இயற்கை கம்பளி இழைகளால் செய்யப்பட்டவை அல்ல.
- இவை அக்ரிலிக் எனும் செயற்கை இழையால் செய்யப்பட்டவை.
- இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படும் கம்பளி ஆடைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
- நெகிழி தயாரிப்பின் போது கிடைக்கும் துணைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் அக்ரிலிக் ஆடைகள் விலை மலிவானவை.
- நீடித்து உழைக்கும் தன்மை, பல வண்ணங்கள் மற்றும் மலிவான விலை அக்ரிலிக்கின் பரவலான பயன்பாட்டிற்கு பங்களிக்கின்றன.
Question 4.
வெப்பத்தால் இளகும் நெகிழிகள் மற்றும் இறுகும் நெகிழிகள் வேறுபடுத்துக.
விடை:
Question 5.
மைக்ரோ நெகிழிகள் என்றால் என்ன? சுற்றுப்புறத்தின் மீது அவை ஏற்படுத்தும் பாதிப்பு யாது?
விடை:
கடலில் குவியும் நெகிழிகள் கடல்நீர், சூரிய ஒளி மற்றும் அலையசைவுகளுக்கு உட்பட்டு, சிறிய துண்டுகளான மைக்ரோ நெகிழிகளாக (நுண்ணிய நெகிழிகள்) உடைகின்றன.
வீட்டில் பயன்படுத்தப்படும் பற்பசை, முகம்கழுவும் கரைசல், உடலைத் தூய்மைப்படுத்தும் தேய்ப்பான்கள் ஆகியவற்றில் காணப்படும் மைக்ரோ நெகிழிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன.
நிலத்தில் தங்கும் மைக்ரோ நெகிழிகள் மற்றும் காற்றில் பரவும் மைக்ரோ நெகிழிகள் ஆகியனவும் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகின்றன.
Question 6.
மட்கும் தன்மை கொண்ட நெகிழி பற்றி எழுது.
விடை:
மட்கும் தன்மை கொண்ட நெகிழியை சோளம், கரும்பு மற்றும் இனிப்புச் சுவை கொண்ட கிழங்குகளின் கூழ்களில் இருந்து பெறமுடியும். (எ.கா) பாலி லாக்டிக் அமிலம் (PLA) அல்லது பாலிலாக்டைடு என்பது உரமாகும் தன்மை கொண்ட உயிர்ப்புத்திறன் கொண்ட வெப்பத்தால் இளகும் நெகிழி ஆகும்.
இதை பயன்படுத்தி உணவுப் பொட்டலக்கலன்கள், குப்பைப்பைகள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சமையல் மற்றும் உணவு மேசை கருவிகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
X. விரிவான விடையளிக்க
Question 1.
நைலான் பற்றி விளக்குக.
விடை:
- முதன் முதலில் முழுமையாகப் பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை நைலான் ஆகும்.
- இரண்டாம் உலகப் போரின் போது பாராசூட்டுகள் மற்றும் கயிறு போன்ற பொருள்களை தயாரிக்க நைலான் பயன்படுத்தப்பட்டது.
- இன்று நாம் பயன்படுத்தும் செயற்கை இழைகளுள் அதிகம் பயன்படும் இழையாக நைலான் விளங்குகிறது.
- நைலான் இழை வலுவாகவும், நீட்சித்தன்மை கொண்டதாகவும், எடை குறைவாகவும் உள்ளது.
- பளபளக்கும் தன்மை கொண்டதாகவும், தோய்ப்பதற்கு எளிதானதாகவும் இருப்பதால் ஆடை தொழிற்சாலைகளில் பரவலாக பயன்படுகிறது.
- காலுறைகள், கயிறுகள், கூடாரங்கள், பல் துலக்கிகள், கார் இருக்கைகளின் பட்டைகள், தலையணை போன்ற பைகள், திரைச்சீலைகள் போன்றவை நைலானால் ஆனவை.
- ஓர் இரும்புக் கம்பியைக் காட்டிலும் ஒரு நைலான் இழையானது வலிமையானது.
- ஹெச்சா மெத்திலீன் டை அமீன் மற்றும் அடிப்பிக் அமிலம் ஆகிய ஒற்றைப் படிகளில் இருந்து நைலான் பெறப்படுகிறது.
Question 2.
ரேயான் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயன் யாது?
விடை:
- ரேயான் ஒரு பகுதியான செயற்கை இழை
- மரக்கூழில் இருந்து பெறப்பட்ட செல்லுலோசில் இருந்து ரேயான் தயாரிக்கப்படுகிறது.
- மரம் அல்லது மூங்கிலின் கூழில் இருந்து பெறப்பட்ட செல்லுலோசை பல வேதிப்பொருள்களைச் சேர்த்து திடப்படுத்தினர்.
- கூழுடன் சோடியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்பட்டு பின் கார்பன்-டை-சல்பைடு சேர்க்கப்படுகிறது.
- சேர்க்கப்பட்ட வேதிப் பொருட்களுடன் செல்லுலோஸ் கரைந்து விஸ்கோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது.
- திரவ விஸ்கோஸினை ஓர் ஸ்பின்னரட்டின் வழியே செலுத்தி, நீர்த்த கந்தக அமிலத்தினுள் செலுத்தும்போது பட்டு போன்ற இழைகள் கிடைக்கின்றன.
- அந்த இழைகளை சோப்பினால் சுத்தம் செய்து உலர வைத்துப் பெறப்படும் புதிய – இழைகளுக்கு ரேயான் என்று பெயர்.
- போர்வையாக, தரை விரிப்பாக, டயபர்களாக, காயங்களுக்கு மருந்திடும் வலைத் துணிகளாக, பேண்டேஜ் துணிகளாக ரேயான் பயன்படுகிறது.
Question 3.
கண்ணாடி பற்றி குறிப்பு வரைக.
விடை:
- சிலிக்கான் டை ஆக்சைடுடன் சோடியம் கார்பனேட் சேர்த்து 1700°C உருக்கி கண்ணாடி தயாரிக்கப்படுகிறது.
- சிலிக்கான் டை ஆக்சைடை உருக்கியதும் சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் அணுக்கள் தமது படிக அமைப்பிலிருந்து சிதையும்.
- அவற்றை மெதுவாகக் குளிர்விக்கும் போது அணுக்கள் வரிசையாக மீண்டும் தனது படிக அமைப்புக்குத் திரும்பும்.
- ஆனால் திரவத்தை உடனடியாகக் குளிர்விக்கும்போது சிலிக்காவின் அணுக்கள், தமது இடங்களில் வரிசைப்படுத்தி பழையபடி படிக அமைப்பை பெற இயலாது.
- எனவே, பழைய அமைப்பில் இல்லாமல் வேறு ஒரு அமைப்பில் அணுக்கள் அமையப் பெறும்.
- இது போன்ற பொருள்களை உருவமற்றவை என்கிறோம்.
- கண்ணாடி நீள் வரிசை அமைப்பில் அமைந்தும், கனிமத்தின் பண்பில் இருந்து, கண்ணாடியின் அமைப்பினை ஒத்த உருவத்திலும் இருக்கும்.
- அந்நிலையில் அது பலபடிகள் எனக் கருதப்படுகிறது.
Question 4.
பலவகை கண்ணாடியினை எவ்வாறு தயாரிக்கலாம்?
விடை:
வர்த்தக அளவில் கண்ணாடித் தயாரிக்கும் போது, மணலுடன், வீணாகிப்போன கண்ணாடி (மறுசுழற்சிக்காக சேகரிக்கப்பட்டது), சோடா சாம்பல் (சோடியம் கார்பனேட்) மற்றும் சுண்ணாம்புக்கல் (கால்சியம் கார்பனேட்) கலந்து உலையில் இட்டு வெப்பப்படுத்த வேண்டும்.
மணலின் உருகு நிலையை குறைக்க சோடா சாம்பல் உதவுகிறது.
இவ்வாறு தயாரான கண்ணாடி நீரில் கரையும். நீரில் கரைவதைத் தடுக்க சுண்ணாம்புக்கல் சேர்க்கப்படுகிறது.
இவ்வாறு பெறப்பட்ட கண்ணாடி சோடா-லைம்-சிலிக்கா கண்ணாடி எனப்படும். இதுவே நாம் பயன்படுத்தும் சாதாரணக் கண்ணாடி.
இரும்பு மற்றும் குரோமியம் சார்ந்த வேதிப்பொருள்களை சேர்ப்பதால் பச்சை நிறக் கண்ணாடி உருவாகிறது.
பைரக்ஸ் என்ற முத்திரையுடன் விற்கப்படும் கண்ணாடி வகை, சூளையில் சிதையாத போரோ சிலிக்கேட் கண்ணாடி வகையாகும். உருகிய நிலையிலுள்ள கண்ணாடியுடன் போரான் ஆக்சைடை சேர்ப்பதன் மூலம் இது பெறப்படுகிறது.
உருகு நிலை கண்ணாடியுடன் ஈய ஆக்சைடை சேர்ப்பதால் எளிதில் வெட்டக்கூடிய கண்ணாடி கிடைக்கிறது.
கண்ணாடி மற்றும் நெகிழியினை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குவதால் குண்டு துளைக்காத கண்ணாடி கிடைக்கிறது.
உருகிய கண்ணாடியை மிக விரைவாக குளிர வைக்கும் போது காரில் உள்ள காற்றுக்கவசங்களாக பயன்படும் கடினக் கண்ணாடி தயாரிக்கப்படுகிறது.
உருகிய கண்ணாடியுடன் வெள்ளி அயோடைடைச் சேர்க்கும்போது பெறப்படும் கண்ணாடி சூரிய அல்லது பிற ஒளி படும்போது கருமைநிறக் கண்ணாடியாக மாறுகிறது. இவை லென்சுகள் மற்றும் கண்கவசக் கண்ணாடிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
மன வரைபடம்