Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

7th Science Guide தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
அ) பிரையோபில்லம்
ஆ) பூஞ்சை
இ) வைரஸ்
ஈ) பாக்டீரியா
விடை:
அ) பிரையோபில்லம்

Question 2.
ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
அ) ஸ்போர்கள்
ஆ) துண்டாதல்
இ) மகரந்தச் சேர்க்கை
ஈ) மொட்டு விடுதல்
விடை:
ஈ) மொட்டு விடுதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 3.
ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலை
ஈ) மலர்
விடை:
ஈ) மலர்

Question 4.
மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை
அ) காற்று
ஆ) நீர்
இ) பூச்சிகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Question 5.
பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
அ) வெற்றிலை
ஆ) மிளகு
இ) இவை இரண்டும்
ஈ) இவை இரண்டும் அன்று
விடை:
இ) இவை இரண்டும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு ………………
விடை:
மகரந்தத்தாள்

Question 2.
…………….. என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்
விடை:
சூற்பை

Question 3.
கருவுறுதலுக்குப் பின் சூல் …………….. ஆக மாறுகிறது.
விடை:
விதை

Question 4.
சுவாச வேர்கள் ……………….. தாவரத்தில் காணப்படுகின்றன.
விடை:
அவிசினியா

Question 5.
வெங்காயம் மற்றும் பூண்டு ……………. வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
விடை:
தரைகீழ்த்தண்டு குமிழம்

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

Question 1.
முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
அல்லி இதழ், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்
விடை:
தவறு – மகரந்தத்தூள் சூலக முடியை அடைவது மகரந்தச் சேர்க்கை

Question 3.
கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட்
விடை:
சரி

Question 4.
இஞ்சி என்பது தரைகீழ் வேராகும்
விடை:
தவறு – இஞ்சி – தரைகீழ் தண்டு

Question 5.
சோற்றுக்கற்றாழையின் இலைகள், நீரைச் சேமிப்பதால் சதைப் பற்றுள்ளதாக உள்ளன.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 2

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
தாவரத்தில் காணப்படும் இருவகையான இனப் பெருக்க முறைகளை எழுது.
விடை:
a) பாலினப் பெருக்கம்
b) பாலில்லா இனப்பெருக்கம்

Question 2.
மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?
விடை:

  1. மகரந்தத்தாள்
  2. சூலகத்தாள்

Question 3.
மகரந்தச் சேர்க்கை – வரையறு.
விடை:
ஒரு மலரில், மகரந்தத்தூள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச்சேர்க்கை

Question 4.
மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகள் யாவை?
விடை:

  • காற்று
  • பூச்சிகள்
  • பறவைகள்
  • நீர்

Question 5.
கந்தம் மற்றும் கிழங்கு ஆகியவற்றிற்க்கு எடுத்துக்காட்டு தருக.
விடை:
கந்தம் – சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு
கிழங்கு – உருளைக்கிழங்கு

Question 6.
பற்றுக் கம்பிகள் என்றால் என்ன?
விடை:

  • ஏறுகொடிகளில் இலையும், இலையின் பாகங்களும் நீண்ட பற்றுக்கம்பிகளாக மாறியுள்ளன.
  • இவை ஏறுகொடிகளைத் தாங்கிகளில் பற்றி எனப்படும்.
    ஏற உதவுகின்றன.
  • எ.கா. பைசம் சட்டைவம் – நுனிச்சிற்றிலை பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 7.
முட்கள் என்றால் என்ன?
விடை:
இலைகள் முட்களாக மாறியதால் தண்டு பசுமையாகி ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிக்கிறது. எ.கா. கள்ளி

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
இருபால் மலரை, ஒருபால் மலரிலிருந்து வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 3

Question 2.
அயல் மகரந்தச் சேரக்கை என்றால் என்ன?
விடை:
ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

Question 3.
இலைத் தொழில் இலைக்காம்பு பற்றி எழுது.
விடை:
அகேஷியா ஆரி குலி பார்மிஸ் தாவரத்தில் இலைக்காம்பு அகன்று, இலைபோல் மாறி இலை செய்யவேண்டிய ஒளிச்சேர்க்கை வேலையை இலைக்காம்பு மேற்கொள்கிறது. அதே

VII. விரிவாக விடையளி

Question 1.
மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.
விடை:
மலரில் மகரந்த தூள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 4
சேர்க்கை செயற்கை மகரந்தச் சேர்க்கை :
நாம் ஆண்மலரில் உள்ள மகரந்தத் தூளை பெண்மலரில் உள்ள சூலக முடியில் சேர்த்தால் அது செயற்கை மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

இயற்கை மகரந்தச் சேர்க்கை :
இயற்கையாகவே பல்வேறு வழிமுறைகளில் (நீர், காற்று, தேனி, பூச்சிகள், பறவைகள் மூலம்) மலரின் கலக முடியை மகரந்தத்தாள் சென்றடைவது இயற்கை மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

  • புற்கள், லேசான மகரந்தத்தூளை உருவாக்கும்.
  • கரந்தப்பை, மகரந்தத்தூளை உதிர்க்கும் போது காற்று அதை எடுத்துச் சென்று அருகில் உள்ள மலரில் சேர்க்கும்.
  • பூச்சிகள் மற்றும் பறவைகளும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்.
  • தேனீ, வண்ணத்துப்பூச்சிகள் மலர்களைச் சுற்றி வட்டமிடும்.
  • இவை ஒரு மலரிலிருந்து மற்றொரு மலருக்குச் செல்லும் போது அதன் கால்கள், இறக்கைகள் மற்றும் வயிற்றில் மகரந்தத்தூள்கள் ஒட்டிக் கொள்ளும் இதன் மூலம் நடக்கும் மகரந்தச் சேர்க்கை அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
  • இதே போல் காற்று மலரை அசைக்கும் போது மகரந்தத்தூள் உதிர்ந்து அதே மலரின் சூலக முடியை அடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும். இது பெரும்பாலும் இருபால் மலரில் நடக்கிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக.
விடை:

  • பொதுவாகத் தண்டுகள் தரைக்கு மேலே வளரும். ஆனால் சில தண்டுகள் தரைக்கு கீழ் வளர்ந்து உணவைச் சேமிக்கிறது.
  • இத்தகைய தரைகீழ்த் தண்டுகள் பருத்தும், தடித்தும் காணப்படும்.
    தரைகீழ்த் தண்டு நான்கு வகைப்படும்

    1. மட்ட நிலத்தண்டு
    2. கந்தம்
    3. கிழங்கு
    4. குமிழம்

மட்ட நிலத்தண்டு :

  • தண்டு தரைக்குக் கீழ் இருக்கும்.
  • இது கணு மற்றும் கணுவிடைகளோடு தடித்து காணப்படும்.
  • கணுவில் செதில் இலைகள் தோன்றம்
  • இது தரைக்குக் கீழ் கிடைமட்டமாகவும் குறிப்பிட்ட வடிவமின்றியும் இருக்கும்.
  • இதன் தண்டில் உள்ள மொட்டுகள் முளைத்து புதிய தண்டு மற்றும் இலைகளை உருவாக்கும். எ.டு. இஞ்சி, மஞ்சள்

கந்தம் :

  • இத்தரைக்கீழ் தண்டு வட்ட வடிவில் இருக்கும்
  • மேற்பகுதியும், அடிப்பகுதியும் தட்டையாக இருக்கும்.
  • இதன் செதில் இலைகளின் கோணத்திலிருந்து ஒன்று அல்லது பல மொட்டுகள் உருவாகும்.
  • ஒவ்வொரு மொட்டும் வளர்ந்து சேய்த் தாவரங்களை உருவாக்கும். எ.டு. சேனை, சேப்பங்கிழங்கு

கிழங்கு :

  • இது கோள வடிவில் உணவைச் சேமிக்கும் தரைகீழ்த் தண்டாகும்.
  • இதன் தண்டில் வளர்வடங்கிய மொட்டுகள் காணப்படும் (கண்கள்)
  • இக்கிழங்கின் ஒரு பகுதியை அதன் மொட்டோடு வெட்டி நடுவதன் மூலம் அவை முளைத்து புதிய தாவரத்தைத் தரும் எ.டு. உருளைக்கிழங்கு.

குமிழம் :

  • இதன் தண்டு மிகவும் குறுகியது. தட்டு போன்றது.
  • இதன் சதைப்பற்றான இலைகள் உணவைச் சேமிக்கும்.
  • இதில் இரண்டு வகை இலைகள் உள்ளன.
    1. சதைப்பற்றுள்ள இலை
    2. செதில் இலை
  • குமிழத்தின் உள்ளே உள்ள இலைகள் உணவைச் சேமிக்கும். எ.கா. பூண்டு, வெங்காயம்

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
இஞ்சி என்பது தண்டு. அது வேர் அல்ல ஏன்?
விடை:

  • ஆம் இஞ்சி என்பது தண்டின் மாற்றுருவாகும்.
  • இது தரைக்குக் கீழ் கிடைமட்டமாகவும், குறிப்பிட்ட வடிவமின்றியும் இருக்கும்.
  • இந்த தரைகீழ்தண்டு உணவைச் சேமிக்கும்.
  • இது கணு மற்றும் கணுவிடைகளோடு இருக்கும்.

Question 2.
ரோஜா மலரின் மகரந்தத் தூள், லில்லி மலரின் சூலக முடியில் விழுந்தால் என்ன – நடைபெறும்? அதில் மகரந்தத் தூள் வளர்ச்சியடையுமா? ஏன்?
விடை:

  • ரோஜா மலரின் மகரந்த்தூள் லில்லி மலரின் சூலக முடியில் விழுந்தால் அது வளர்ச்சி அடையாது.
  • மேலும் லில்லி மலரின் சூலக முடியானது அதன் இனத்தின் மகரந்தத் தாளினை மட்டும் இனங்கண்டு மகரந்தச் சேர்க்கை நடந்து கருவுறுதல் நிகழும். ரோஜா மலரின் மகரந்தத்தை ஏற்றுக் கொள்ளாது.

IX. பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி

Question 1.
கூற்று : பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன.
காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது விதையாக மாறுகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
கூற்று : கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்.
காரணம் : இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
விடை:
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு

X. படம் சார்ந்த கேள்விகள்

Question 1.
பின்வரும் படங்களைப் பார்த்து, அதன் பாகங்களைக் குறிக்கவும்.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 12
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 5
சூலகமுடி சூலகம் மகரந்தக்கம்பி சூல் புல்லி மகரந்தத்தாள் அல்லி சூலகத்தண்டு மகரந்தத்தாள் சூற்பை

ii. அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு தாவரங்களை அடையாளம் காண்க.
பின்வரும் தாவரங்களின் மாற்றுருக்களை எழுதுக.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 13
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 6

7th Science Guide தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
மலரில் பெரியதாகத் தெரியும் பாகம் …………………….
அ) அல்லி
ஆ) புல்லி
இ) மகரந்தத்தாள்
ஈ) சூலகம்
விடை:
அ) அல்லி

Question 2.
மலரில் மகரந்தத்தாள்கள் அமைந்து சூலகவட்டம் இல்லாதிருந்தால் அதை …………………… என அழைக்கலாம்
அ) ஆண் மலர்
ஆ) பெண்ம லர்
இ) ஒருபால் மலர்
ஈ) இருபால் மலர்
விடை:
அ) ஆண்ம லர்

Question 3.
தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் எனப்படுபவை …………………… விதைகள் ஆகும்
அ) கத்தரி
ஆ) வெண்டை
இ) ஆர்க்கிட்
ஈ) சீத்தாப்பழம்
விடை:
இ) ஆர்க்கிட்

Question 4.
சூற்பை கருவுறுதலுக்குப் பின் ……………. ஆக மாறும்
அ) விதை
ஆ) கனி
இ) மலர்
ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
விடை:
ஆ) கனி

Question 5.
………………… ல் துண்டாதல் எனும் பாலில்லா இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
அ) ஸ்பைரோகைரா
ஆ) கரும்பு
இ) ஈஸ்ட்
ஈ) காளான்
விடை:
அ) ஸ்பைரோகைரா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சாதகமற்ற சூழ்நிலையில் பூவாத் தாவரங்களான பாசிகள் மற்றும் டெரிடோஃபைட்டுகள் ………. உருவாக்கும்
விடை:
ஸ்போர்களை

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
…………………. வேர்கள் ஆலமரத்தின் கிடைமட்டக் கிளைகளில் இருந்து தோன்றி, பூமியை நோக்கி வளர்ந்து, தூண்போல் மாறி மரத்தை தாங்குகிறது.
விடை:
தூண்

Question 3.
……………… தாவரம் தொற்றுத் தாவரமாக மரங்களில்
விடை:
வளரும்

Question 4.
………….. ஓடு தண்டு எனும் தரையொட்டிய தண்டின் மாற்றுருக்கு வல்லாரை எடுத்துக்காட்டாகும்
விடை:
வாண்டா

Question 5.
………………. தாவரத்தின் இலையின் நுனி பற்றுக் கம்பியாக மாறியுள்ளது.
விடை:
(குளோரியோசா சூப்பர்பா

III. சரியா, தவறா? தவறெனில் சரியானதை எழுதுக

Question 1.
சூற்பைக்கு மேலே காணப்படும் மெல்லிய குழல் போன்ற பகுதிக்கு சூலகத்தண்டு என்று பெயர்.
விடை:
சரி

Question 2.
மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் அனைத்துக் காரணிகளும் மகரந்தச் சேர்க்கையாளர்கள் எனப்படும்.
விடை:
சரி

Question 3.
உறிஞ்சு வேர்கள் கஸ்குட்டா எனும் ஒட்டுண்ணித் தாவரத்தில் காணப்படுகிறது.
விட:
சரி

Question 4.
காட்டு ஸ்ட்ரா பெர்ரியில் காணப்படும் மாற்றுரு ஓடு தண்டாகும்.
விடை:
தவறு – ஸ்டோலன் என்பதே சரியான விடை

Question 5.
கொல்லிகளுக்கு அகேஷியா என்னும் தாவரம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
விடை:
தவறு – நெப்பன்தஸ் என்னும் தாவரமே சிறந்த எடுத்துக்காட்டாகும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 7
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 8

V. சரியான விடையை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்துக

Question 1.
(புல்லி , மகரந்தத்தாள், மகரந்தச் சேர்க்கையாளர், கருவுறுதல், மகரந்தச்சேர்க்கை )
1. ஒரு மலரில் மகரந்தத்தூள் சூலகமுடியை அடைவது
2. இலை போன்ற பசுமை நிறமுடைய அமைப்பு மற்றும் மொட்டினை முழுமையாக மூடுவது.
3. ஒரு மலரின் ஆண் இனப்பெருக்க வட்டம்
4. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகள்
5. ஆண் கேமீட் மற்றும் பெண் கேமீட் இணையும் நிகழ்ச்சி
விடை:
1. மகரந்தச் சேர்க்கை
2. புல்லி
3. மகரந்தத்தாள்
4. மகரந்தச் சேர்க்கையாளர்
5. கருவுறுதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
(ஆலமரம், முள்ளங்கி, மிளகு, இஞ்சி, பூண்டு)
1. தண்டு மிகவும் குறுகியது. தட்டு போன்றது.
2. கிடைமட்டக் கிளைகளில் இருந்து தோன்றும் வேர்கள் தூண் போல் தாவரத்தைத் தாங்குகிறது.
3. இது ஒரு தரைகீழ் மட்ட நிலத்தண்டு
4. பற்று வேர்கள் இக்கொடியில் உள்ளது.
5. கதிர்வடிவ ஆணிவேர் காணப்படுகிறது.
விடை:
1. பூண்டு
2. ஆலமரம்
3. இஞ்சி
4. மிளகு
5. முள்ளங்கி

VI. பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி.

Question 1.
கூற்று : நெப்பன்தஸ் தாவரத்தில் இலைகள் குடுவைகளாக மாறிப் பூச்சிகளை கவர்ந்து இழுக்கின்றன.
காரணம் : இலையின் உட்பகுதியில் சுரக்கப்படும் நொதிகளால் பூச்சிகளை உட்கொண்டு அவற்றிடமிருந்து நைட்ரஜனைப் பெறுகின்றன.

அ. கூற்றும் காரணம் தவறு ,
ஆ) கூற்றும் காரணமும் சரி
இ) கூற்று சரி ; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ; காரணம் சரி
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி

Question 2.
கூற்று : விதைகள் இல்லாமல் மற்ற வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கத்தை நாம் பாலில்லா இனப்பெருக்கம் என்கிறோம்.
காரணம் : ஈஸ்ட் மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்வது பாலினப்பெருக்கம் ஆகும்.

அ. கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு; காரணம் சரி
இ) கூற்றும், காரணமும் சரி
ஈ) கூற்றும், காரணமும் தவறு
விடை:
அ . கூற்று சரி , காரணம் தவறு

VII. சரியான இணையை கண்டுபிடி

Question 1.
பற்று வேர்கள் : வெற்றிலை ; முட்டுவேர்கள் ………………
விடை:
கரும்பு

Question 2.
ஈஸ்ட் : மொட்டுவிடுதல் ; ஸ்பைரோகைரா ………………
விடை:
துண்டாதல்

VIII. மிகக் குறுகிய விடை தருக

Question 1.
உடல் இனப்பெருக்கம் என்றால் என்ன?
விடை:
தாவரத்தின் உடல் உறுப்புகளான வேர், தண்டு மற்றும் இலைகள் தாவரத்தின் இனப்பெருக்கத்திற்கு உதவுவதை உடல் இனப்பெருக்கம் என்கிறோம்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
வறண்ட சூழ்நிலையிலுள்ள தாவரத்தின் நீராவிப்போக்கினைகுறைக்க உதவும் தகவமைப்பு என்ன?
விடை:

  • கள்ளித் தாவரங்களின் கடினமான தண்டு ஒளிச்சேர்க்கையைச் செய்யும்
  • அதன் இலைகள் முட்களாக மாறியுள்ளன.
  • இதனால் மேற்பரப்பு குறைவதால் நீராவிப்போக்கு தவிர்க்கப்படும்

Question 3.
வாண்டா தாவரத்தைப் பற்றி நீவிர் அறிவது யாது?
விடை:
வாண்டா தாவரம் தொற்றுத் தாவரமாக மரங்களில் வளரும். இதன் தொற்றுவேர்களில் உள்ள வெலமன் திசு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கைக்கு உதவும்.

IX. குறுகிய விடை தருக தன் மகரந்தச்சேர்க்கை.

Question 1.
அயல் மகரந்தச் சேர்க்கை வேறுபடுத்துக. தன் மகரந்தச்சேர்க்கை
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 9

Question 2.
இரட்டைத் தேங்காயின் சிறப்பு என்ன?
விடை:

  • உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை இரட்டைத் தேங்காய் ஆகும்.
  • இதன் விதை இரண்டு தேங்காய் ஒன்றோடொன்று இணைந்து உருவானது போல் இருக்கும்.
  • இவ்விதை சேசில்லிஸ் என்ற இடத்தில் உள்ள இரண்டு தீவுகளில் மட்டுமே முளைக்கும்.
  • ஒருவிதையின் நீளம் 12 அங்குலம், அகலம் 3 அடி எடை 18 கிலோ உள்ளதாக இருக்கும்.

Question 3.
தாவரத்தின் வாழ்க்கைச் சுழற்சியை படம் வரைந்து பாகங்களைக் குறி.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 10

Question 4.
ஹாஸ்டோரியாவின் முக்கிய பணி என்ன?
விடை:
கஸ்குட்டா என்ற ஒட்டுண்ணித் தாவரம் பிற மரங்களிலும், மற்ற தாவரங்களிலும் படர்ந்து தனது உறிஞ்சு வேர் (அல்லது) ஹாஸ்டோரியா மூலம் தாவரத் திசுக்களைத் துளைத்து அதிலுள்ள ஊட்டச் சத்தை உறிஞ்சுகின்றன.

இவ்வகை வேர்கள் பொதுவாக ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படுகிறது.

Question 5.
நிமட்டோஃபோர்கள் என்றால் என்ன?
விடை:

  • அவிசீனியா என்ற மரத்தின் வேர்கள் வாயு பரிமாற்றத்திற்காகத்தரைக்கு மேலே வளர்கின்றன.
  • இவை சுவாசிக்கும் வேர்கள் அல்லது நிமட்டோபோர்கள் எனப்படுகின்றன.
  • குச்சி போன்ற இந்த வேர்களில் உள்ள எண்ணற்ற துளைகள் மூலம் வாயு பரிமாற்றம் நடைபெறுகிறது.

X. விரிவான விடை தருக

Question 6.
ஒரு மலரில் கருவுறுதலுக்குப்பின் நடைபெறும் மாற்றங்களை பட்டியலிடுக.
விடை:
அ) சில கனிகளில் புல்லி வட்டம் கனியோடு ஒட்டி நிலைத்திருக்கும்.
ஆ) அல்லிகள் கீழே உதிரும்
இ) மகரந்தத்தாள் வட்டமும் உதிரும்
ஈ) சூற்பை கனியாக மாறும்
உ) சூலகத்தண்டும், சூற்பையும் உதிரும்.
ஊ) சூலகம் பருத்து உணவைச் சேமித்துக் கனியாக உருவாகிறது
எ) சூற்பையில் உள்ள சூல்கள் விதைகளாக மாறும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 7.
உடல் இனப்பெருக்கம் என்றால் என்ன? அதன் வெவ்வேறு வகைகளை விவரி.
விடை:
தாவரத்தின் உடல் உறுப்புகளான வேர், தண்டு மற்றும் இலைகள் தாவரத்தின் இனப்பெருக்கத்திற்கு உதவுதலை உடல் இனப்பெருக்கம் என்கிறோம். அதன் பிறவகைகள் பின்வருமாறு

மொட்டு விடுதல் :

  • ஈஸ்ட் என்ற ஒரு செல் உயிரிதான் சமமற்ற பகுப்படைந்து ஒரு சிறிய மொட்டினைத் தோற்றுவிக்கும்.
  • இது படிப்படியாக வளர்ந்து தாய் செல்லிலிருந்து விடுபட்டுப் புதிய ஈஸ்ட் செல்லாக மாறும்.

துண்டாதல்

  • ஸ்பைரோகைரா முதிர்ச்சியடையும் போது பல துண்டுகளாக உடையும்
  • பின் ஒவ்வொரு துண்டும் வளர்ந்து புதிய இழையை உருவாக்கும். இதுவே துண்டாதல் எனப்படும்

ஸ்போர் உருவாதல் :

  • சாதமற்ற சூழலில் (தண்ணீர் இல்லாமை, உயர் வெப்பநிலை, ஊட்டச்சத்து குறைபாடு) பூவாத் தாவரமான பாசிகள் மற்றும் டெரிடோஃபைட் தாவரங்கள் ஸ்போர்களை உருவாக்கும்.
  • இவை சாதகமான சூழ்நிலையில் முளைத்து புதிய தாவரத்தை உருவாக்கும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 11