Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

6th Science Guide அன்றாட வாழ்வில் தாவரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.
அ) வாத்து
ஆ) கிளி
இ) ஓசனிச்சிட்டு
ஈ) புறா
விடை:
இ) ஓசனிச்சிட்டு

Question 2.
இயற்கையான கொசு விரட்டி
அ) ஜாதிக்காய்
ஆ) மூங்கில்
இ) இஞ்சி
ஈ) வேம்பு
விடை:
ஈ) வேம்பு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 3.
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
அ) உருளைக்கிழக்கு
ஆ) கேரட்
இ) முள்ளங்கி
ஈ) டர்னிப்
விடை:
அ) உருளைக்கி

Question 4.
பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?
அ) நெல்லி
ஆ) துளசி
இ) மஞ்சள்
ஈ) சோற்று கற்றாழை
விடை:
அ) நெல்லி

Question 5.
இந்தியாவின் தேசிய மரம் எது?
அ) வேப்பமரம்
ஆ) பலா மரம்
இ) ஆலமரம்
ஈ) மாமரம்
விடை:
இ) ஆலமரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _____ ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
விடை:
16

Question 2.
______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.
விடை:
பருத்தி

Question 3.
நான் தமிழ்நாட்டின் மாநில மரம் நான் யார்? _______
விடை:
பனை

Question 4.
______ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.
விடை:
துளசி

Question 5.
அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ண க் கூடிய பருப்புகள் (அ) விதைகள் ______ எனப்படுகின்றன.
விடை:
பயிறு வகைகள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

III. சரியா? தவறா? தவறாக இருந்தால் சரியாக விடையை எழுதுக.

Question 1.
அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
தவறு. அலங்காரத் தாவரங்கள்

Question 2.
பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.
விடை:
சரி

Question 3.
அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.
விடை:
தவறு – உணவு தாவரம்.

Question 4.
கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.
விடை:
தவறு – கோடை காலத்திற்கு பருத்தி உடைகள் தான் ஏற்றவை.

Question 5.
கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.
விடை:
தவறு – சர்க்கரை தயாரிக்க பயன்படுகிறது.

IV. பின்வருவனவற்றைப் பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 80

V. ஒப்பிடுக.

Question 1. மாம்பழம் : கனி :: மக்காச்சோளம் : _______
விடை:
தானியம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 2.
தென்னை : நார் :: ரோஜா : _____
விடை:
அத்தர்

Question 3.
தேனீக்கள் : மகரந்தச் சேர்க்கையாளர் :: மண்புழு : ______
விடை:
மண்புழு உரம் தயாரிப்பாளர்

VI. மிகக் குறுகிய விடை தருக.

Question 1.
உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
மனிதர்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாக விளங்கும் தாவரங்கள் உணவுத் தாவரங்கள் எனப்படுகின்றன.
(எ.கா.) காய்கறிகள் – பீட்ரூட், கேரட்
தானியங்கள் – நெல், கோதுமை
பருப்பு வகைகள் – கொண்டைக் கடலை, பச்சைப்பயிறு.

Question 2.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
நோய்களைக் குணப்படுத்த பயன்படும் தாவரங்களை மருத்துவத் தாவரங்கள் என அழைக்கிறோம்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 81

Question 3.
வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?
வன்கட்டை:
வணிக ரீதியில் பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை, அடர்த்தி அடிப்படையில் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 100.1

Question 4.
நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?
விடை:
வெப்ப மண்டலத் தாவரங்களிலிருந்து பெறப்படுவதும் உணவிற்கு நறுமணமூட்டப் பயன்படும் தாவரப் பொருட்கள் நறுமணப் பொருட்கள் எனப்படுகின்றன. பெறப்படும் பொருட்கள்:
மரப்பட்டைகள், வேர்கள், இலைகள், மலர்கள் (அ) தண்டுகள் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. பயன்க ள்:
உணவிற்கு சுவையூட்டவும் – நிறமூட்டியாகவும், உணவைக் கெடாமல் பாதுகாக்கவும் பயன்ப டுகிறது.
(எ.கா) ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம், பிரியாணி இலை, கொத்தமல்லி விதைகள், இஞ்சி, ஜாதிக்காய் மற்றும் இலவங்கப் பட்டை.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 5.
நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 85

Question 6.
மரக்கட்டைகளின் பயன்கள் யாவை?
வன்கட்டை:
உயர்ரக மரச்சாமான்கள், நாற்காலிகள், மேற்கூரைகள் மற்றும் கட்டில், மேஜை, கதவு, நிலைக்கால் ஜன்னல் போன்ற மரக்கட்டுமானங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.
மென்கட்டை:
ஓட்டுப்பலகைகள், மரப்பெட்டிகள், நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் (அ) காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது.

VII. குறுகிய விடை தருக.

Question 1.
அலங்காரத் தாவரங்கள் பற்றி எழுதுக.
விடை:
அழகியல் காரணங்களுக்காக வீட்டுத் தோட்டங்களில், பூங்காக்களில், மாடித் தோட்டங்களில் வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்கார தாவரங்கள் எனப்படும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 96

Question 2.
வேப்ப மரத்தின் பயன்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 97

Question 3.
எவையேனும் ஐந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 98

VIII. விரிவான விடை தருக.

Question 1.
மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.
விடை:
வணிக ரீதியாக பயன்படும் மரக்கட்டைகள் வலிமை, அடர்த்தி அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99

Question 2.
விலங்கு – தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.
வரையரை:
உணவு, வசிப்பிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு விலங்குகள் தாவரங்களைச் சார்ந்திருக்கின்றன. இந்தத் தொடர்பினால் விலங்குகள் மட்டுமின்றி, தாவரங்களும் பயனடைகின்றன – இவை பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.2

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது. இதற்கு காரணம் யாது?
விடை:

  1. நிறைய பாலைவனங்களில் 10 அங்குலத்திற்கும் குறைவான மழை அளவே ஒவ்வொரு ஆண்டும் காணப்படுகிறது.
  2. மழை அளவை விட நீராவிப் போக்கின் அளவு அதிகம்.
  3. பாலைவனங்களில் வாழும் தாவர விலங்கினங்களுக்கு மிகச் சிறிய அளவு தான் கிடைக்கிறது.
  4. மேலும் அவை நீரைச் சேமிக்கவும், வறட்சியைத் தாங்கவும் தகவமைப்புப் பெற்றுள்ளது.
    (எ.கா) கள்ளி வகை தாவரங்கள் – ஒட்டகம் போன்ற விலங்குகள்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 2.
“பனைமரம் உயரமான மரம், அதனால் அது வன்கட்டையைத் தருகிறது” என்று கவிதா கூறினார். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? எதுவாயினும் ஏன் என்பதை எழுதுக.
விடை:

  1. பனை மரங்கள் அதி உயரமான உயரமுடைய தாயிருந்தாலும் அவை மென் கட்டைகளையே உருவாக்கின்றன.
  2. வளையக்கூடிய வலுவற்றதாக இருப்பதால் இதன் கட்டைகள் மென்மையான கட்டைகள் எனப்படுகின்றன.
  3. இதன் கட்டை நார்கள் – தொப்பிகள் போன்ற பொருட்கள் செய்ய பயன்படுகிறது.
  4. ‘கஜா’ புயலில் (நவம்பர் 2018) தென்னை மரங்கள் இலட்சக்கணக்கில் வேரோடு வீழ பனை மென்கட்டைகளை உடையதால் புயலால் சேதமடையவில்லை.

Question 3.
படங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

அ. பாக்டீரியாக்கள் எவ்வாறு மண் வளத்தை அதிகரிக்கின்றன?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.1
விடை:

  1. தாவர விலங்கு கழிவுகளை மண்ணில் சிதைவடையச் செய்து வளமான மட்கிய உரத்தை உருவாக்குகிறது.
  2. வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தி மண் வளத்தை அதிகரிக்க விவசாயத்திற்கு உதவுகிறது.

ஆ. தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேனீக்கள் அவசியம் எவ்வாறு?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.3
விடை:
தேனீக்கள் பூக்களிலுள்ள தேனை எடுத்து தேன் பெற உதவுவதோடு அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவி, தாவர இனப்பெருக்கம் நடைபெற மிக அவசியமாகிறது.

6th Science Guide அன்றாட வாழ்வில் தாவரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஆற்றல் தருபவை.
அ) தாவரங்கள் மட்டும்
ஆ) தாவரங்கள் மற்றும் விலங்குகள்
இ) விலங்குகள் மட்டும்
ஈ) இவை எதுவுமல்ல
விடை:
அ) தாவரங்கள் மட்டும் பருவம்

Question 2.
ரவை உப்புமா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அ) நெல்
ஆ) கோதுமை
இ) சிறு தானியம்
ஈ) சோளம்
விடை:
ஆ) கோதுமை

Question 3.
இலை நார்கள் காணப்படுவது
அ) அலோ வீரா
ஆ) அகேவ்
இ) தென்னை
ஈ) பருத்தி
விடை:
ஆ) அகேவ்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 4.
எந்த ஒரு நாட்டின் வளமும் பொதுவாக எதனைச் சார்ந்துள்ளது.
அ) கல்வி வளர்ச்சி
ஆ) விவசாய வளர்ச்சி
இ) தொழில் வளர்ச்சி
ஈ) அரசியல் வளர்ச்சி
விடை:
ஆ) விவசாய வளர்ச்சி

Question 5.
தாவரங்கள் அதன் அழகுணர்ச்சிக்காக வளர்க்கப்படுவது.
அ) நார் தாவரங்கள்
ஆ) மருத்துவத் தாவரங்கள்
இ) உணவு தாவரங்கள்
ஈ) அலங்காரத் தாவரங்கள்
விடை:
ஈ) அலங்காரத் தாவரங்கள்

II. மிகக்குறுகிய விடையளி

Question 1.
பழங்காலத்திலிருந்து மனிதர்கள் அரிசி, கேழ்வரகு, கம்பு போன்றவற்றை உணவாக பயன்படுத்தி வந்ததற்கான சான்றுகள் எங்கிருந்து பெறப்பட்டது?
விடை:

  1. பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைக்கப் பெற்ற தானியங்களின் எச்சங்கள் மற்றும் படிவுகள் மூலமும்.
  2. பண்டைய இலக்கியக் குறிப்புகளின் வாயிலாகவும் இதன் பயன்பாட்டினை உறுதி செய்யும் சான்றுகள் பெறப்பட்டன.

Question 2.
கயிறு எதிலிருந்து பெறப்படுகிறது?
விடை:
தென்னை , மர தண்டு, இலை பட்டைகளிலிருந்தும் இன்னும், சணல், ஆழிச் செடி போன்ற பல வகையான தாவரப் பகுதிகளிலிருந்து நார்கள் பிரித்தெடுக்கப்பட்டு கயிறுகள் திரிக்கப்படுகின்றன.

Question 3.
இந்தியாவில் சணல் பயிரிடப்படும் இடங்கள் மாநிலங்களின் பெயர் தருக.
விடை:
மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பீகார், உத்திரப்பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகிறது.
மேற்கு வங்காளம் – மொத்த இந்திய சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது.

Question 4.
பருத்தி தாவரம் ஏன் பணப்பயிராக பயன்படுகிறது?
விடை:

  1. பருத்தி நெசவு நார்களை தரும் (துணி செய்ய உதவும் நார்கள்) தாவரமாகும்.
  2. எனவே மனித அத்தியாவசிய தேவையான உடைகள் 80% பருத்தி மற்றும் பருத்தி சேர்க்கப்பட்ட செயற்கை இழைகளிலிருந்தே பெறப்படுகிறது.
  3. இது அதிக பயிரிடப்படுவதாலும், பயன்படுத்தப்படுவதாலும் பொருளாதார முக்கியத்துவமுடையதாலும் இது பணப்பயிராகக் கருதப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 5.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
நோய்கிருமிகளுக்கு எதிரான வேதி கூட்டுப் பொருள்களை உள்ளடக்கிய தாவரங்கள் – மருத்துவத் தாவரங்கள் எனப்படும்.

Question 6.
பின்வரும் படம் என்னவென்று காண். அதன் பயனையும் தருக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.5

  • கொடுக்கப்பட்ட படம் கிராம்பு எனப்படும் வாசனைப் பொருள்.
  • இது மலரின் மொட்டாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 100