Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 2 நீர் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 2 நீர்

6th Science Guide நீர் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.
உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____ ஆகும்.
அ) நன்னீ ர்
ஆ) தூயநீர்
இ) உப்புநீர்
ஈ) மாசடைந்த நீர்
விடை:
இ) உப்புநீர்

Question 2.
பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?
அ) ஆவியாதல்
ஆ) ஆவி சுருங்குதல்
இ) மழை பொழிதல்
ஈ) காய்ச்சி வடித்தல்
விடை:
ஈ) காய்ச்சி வடித்தல்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 3.
பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
i) நீராவிப்போக்கு
ii) மழைபொழிதல்
iii) ஆவி சுருங்குதல்
iv) ஆவியாதல்
அ) ii) மற்றும் iii)
ஆ) ii) மற்றும் iv)
இ) i) மற்றும் iv)
ஈ) i) மற்றும் ii)
விடை:
இ) i) மற்றும் iv)

Question 4.
நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?
அ) பனி ஆறுகள்
ஆ) நிலத்தடிநீர்
இ) மற்ற நீர் ஆதாரங்கள்
ஈ) மேற்பரப்பு நீர்
விடை:
ஆ) நிலத்தடிநீர்

Question 5.
வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்
அ) வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.
ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்
இ) வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.
ஈ) அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
விடை:
ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ______ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.
விடை:
3%

Question 2.
நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ____ என்று பெயர்.
விடை:
ஆவியாதல்

Question 3.
நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _____ கட்டப்படுகிறது.
விடை:
அணை

Question 4.
ஆறுகளில் பாயும் நீரின் அளவு ____ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்
விடை:
மழை

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 5.
நீர் சுழற்சியினை _____ என்றும் அழைக்கலாம்.
விடை:
ஹைட்ராலிஜிக்கல்
சுழற்சி

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.
விடை:
தவறு – ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக உள்ளன.

Question 2.
நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.
விடை:
தவறு – கடல் நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் முகத்துவாரம் எனப்படும்.

Question 3.
சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.
விடை:
தவறு – அனைத்து வெப்ப மூலங்களாலும் ஆவியாதல் நிகழும்.

Question 4.
குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.
விடை:
சரி – உறைதலால் புற்களின் மீது பனி உருவாகும்.

Question 5.
கடல்நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.
விடை:
தவறு – கடல்நீரை நேரடியாகப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 80

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.
  2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.
  3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.
  4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது..
  5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.
  6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.
  7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.
  8. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

விடை:

  1. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.
  2. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.
  3. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த்திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாகும்.
  4. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிற
  5. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.
  6. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.
  7. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.
  8. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

VI. ஒப்புமை தருக.

Question 1.
மக்கள் தொகைப் பெருக்கம் : நீர் பற்றாக்குறை :: மறு சுழற்சி : _____
விடை:
நீர் மேலாண்மை

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
நிலத்தடிநீர் : ____ : மேற்பரப்பு நீர் : ஏரிகள்
விடை:
கிணறு

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.
விடை:
கடல், ஆறு, ஏரி, குளம், கிணறு, பனிப்பாறை, பனியாறு

Question 2.
நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது?
விடை:
கிணறுகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஆறுகள், நீர்த்தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவைகளிலிருந்து நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் நீரை பெறுகின்றனர்.

Question 3.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?
விடை:
குளிர்சாதனப் பெட்டியில் குளிரூட்டப்பட்ட முகவை நீரானது அதனைச் சுற்றியுள்ள காற்றை குளிரச் செய்கிறது. அதன்மூலம் காற்றிலுள்ள நீராவி சுருங்கி குவளையின் வெளிப்பகுதியில் நீர்த்திவளைகளை உருவாக்கும். எனவே பாட்டிலைச் சுற்றி குளம் போல் அந்த நீர் தேங்கியிருக்கும்.

Question 4.
அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை. ஏன்?
விடை:

  • மழை பொழிவு நிகழ குளிர்ச்சியான காற்று தேவை.
  • மேகங்களை சுற்றியுள்ள காற்று குளர்ச்சியடையும் போது மட்டுமே மழை பொழிவு நிகழும்.

Question 5.
நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?
விடை:
துருவங்களிலுள்ள பனிப்படிவுகள், பனியாறுகள், பனிப் பாறைகளில் நீர் பனிக்கட்டியாகக் காணப்படுகின்றன.

Question 6.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதியில் உள்ள நீர்வாழ் விலங்குகள் எவ்வாறு உயிர் வாழ்கின்றன?
விடை:

  • ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளில் நீரின் மேற்பரப்பு திண்மநிலையில் பனிப்படலங்களாக உள்ளன.
  • இந்த மிதக்கும் பனிப்படலங்கள் ஒரு பாதுகாப்பு படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவதை தடுக்கிறது.
  • இது நீர்வாழ் உயிர்களுக்கு சாதகமாக அமைந்து அவை உயிர்வாழ உதவுகின்றது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 7.
மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?
விடை:

  1. மழைநீர் எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலேயே சேகரித்தல்.
  2. ஓடும் மழை நீரினை சேகரித்தல்.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 85

Question 2.
“நீர் சேமிப்பு ” என்ற தலைப்பில் சில வாசகங்களை உமது நடையில் எழுதவும்.
விடை:
”நீரின்றி அமையாது உலகு”
“மரம் நடுவோம் ! மழை பெறுவோம்!!”
“மழைநீர் சேமிக்க ஊக்கம் பெறு”
“மழைநீரில் உயிர் ஓட்டம் உண்டு”
”மனிதா நீ வாழ உயிர்நீர் ஒன்று”

Question 3.
புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீ ர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.
விடை:

  • புவிப்பரப்பில் 71% தண்ணீ ர் இருந்தாலும் நன்னீரின் அளவு 3% மட்டுமே.
  • உயிரினங்கள் நன்னீரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • நன்னீரை பயன்படுத்தும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
  • எனவே நீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமே.

Question 4.
கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்தாமல் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிற்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.
விடை:

  • கழிவுநீரை சமன்படுத்தாமல் ஆறுகளிலோ, கடலிலோ வெளி யேற்றக்கூடாது.
  • ஏனெனில் அவை ஆறு, கடல் ஆகிய நீர் ஆதாரங்களை மாசு படுத்தும்.
  • எனவே அதில் உயிரினங்கள் வாழ முடியாது. மேலும் அந்நீரை பயன்படுத்த முடியாது.

Question 5.
இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களை தெளிவுப்படுத்தவும்.
விடை:

  1. மக்கள் தொகை பெருக்கம்
  2. சீரான மழை பொழிவின்மை
  3. நிலத்தடி நீர்மட்டம் குறைதல்
  4. நீர் மாசுபடுதல்
  5. நீரை கவனக்குறைவாக கையாளுதல்

IX. விரிவான விடையளி

Question 1.
குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.
விடை:
குடிநீர் என்பது குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் தேவைப்படும் சுத்தமான பாதுகாப்பான நீராகும்.
பண்புகள் :

  • அமில, காரப்பண்பு pH மதிப்பு சரியாக இருக்க வேண்டும்.
  • பாக்டீரியா முதலிய தொற்று இருக்கக்கூடாது.
  • குடிநீர் சுத்தமானதாக, ஒளி ஊடுருவக்கூடியதாகவும், நிறமற்றதாகவும் இருக்க வேண்டும்.
  • குடிநீரில் இயற்கையான கனிமங்கள், மினரல்ஸ் இருக்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.
விடை:

  • இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் ஆவார்.
  • இவர் மழைநீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் 350 கிராமங்களில் 4500 தடுப்பணைகளையும், தண்ணீர் சேமிப்பு குளங்களையும் கட்டினார்.
  • நீர்வளத்தை இழந்து மடிந்து கொண்டிருந்த ஆறுகள் இவர் முயற்சியால் புத்துயிர் பெற்றன.
  • இவர் பெற்ற விருதுகள்
  • ராமன் மகசேசே விருது
  • ஜம்னலால் பஜாஜ் விருது
  • தண்ணீருக்கான நோபல் பரிசான ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது முதலியன.
  • இவர் இந்தியாவின் “ஜல் புருஷ்’ (தண்ணீ ர் மனிதர்) என்று அழைக்கப்படுகிறார்.

Question 3.
மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.
விடை:

  • மழைநீரை நேரடியாக சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல் மழைநீர் சேகரிப்பு எனப்படும்.
    வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகள்

    1. மழை பொழிகிற இடத்தில் சேகரித்தல் :
      (எ.கா.) கட்டிடங்களின் மேல்தளத்திலிருந்து வரும் மழைநீரை சேகரித்தல்.
    2. ஓடும் மழை நீரை சேகரித்தல் :
      (எ. கா.) மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்தல்.

X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
ஒரு நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ காணப்படவில்லை. அப்பகுதியில் மேகங்கள் உருவாதல் நிகழுமா?
விடை:
மேகங்கள் உருவாகும். ஏனெனில் மரங்கள் இருந்தால் கூட நீராவிப்போக்கு மூலம் நீராவி மேலே சென்று மேகமாக மாறும்.

Question 2.
புவியில் 3% மட்டுமே நன்னீர் உள்ளது. அதனை அதிகப்படுத்த முடியாது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் நன்னீரினை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம்?
விடை:

  • நீரினை கவனமாகவும், குறைந்த அளவும் பயன்படுத்த வேண்டும்.
  • நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  • மழைநீரை சேமித்து நிலத்தடிநீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும்.

XI. குறுக்கெழுத்து.

மேலிருந்து கீழ் :

Question 1.
நீரைச் சேமிக்கும் ஒரு முறை.
விடை:
மறுசுழற்சி

Question 2.
கடல்நீரில் இருந்து நீரைப் பெறும் முறை
விடை:
ஆவியாதல்

Question 6.
அணைகளில் தேங்கியுள்ள நீர் _____ தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:
மின்சாரம்
இடமிருந்து வலம் :

Question 3.
இயற்கையில் கிடைக்கும் மிகப்பெரிய அளவிலான உவர்ப்பு நீர் _____ ஆகும்.
விடை:
கடல்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 4.
வெயில் காலங்களில் உடலிலிருந்து அதிகளவில் நீர் ____ ஆக வெளியேறும்.
விடை:
வியர்வை

Question 5.
தாவரங்களில் _____ நடைபெற்று, நீர் சுழற்சியில் பங்குபெறுகிறது.
விடை:
நீராவிபோக்கு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 90
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 91

XII.
1) வரைபடத்தினை உற்றுநோக்கி பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ) மீனில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ?
ஆ) எந்த உணவுப்பொருள் தன்னகத்தே அதிகளவு நீரினைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடவும்.
இ) எந்த உணவுப் பொருள் தன்னகத்தே குறைந்த அளவு நீரினைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடவும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 92
ஈ) மனித உடலில் சதவீத அளவு நீர் உள்ளது.
உ) நீர்ப்போக்கு ஏற்பட்ட காலங்களில் ஒருவர் வரைபடத்தில் காணப்படும் எந்த உணவுப் பொருளை எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடவும்.
விடை:
அ. 70 %
ஆ. தர்பூசணி
இ. மீன்
ஈ. 60 %
உ. தர்பூசணி

Question 2.
பின்வரும் தமிழ்நாடு வரைபடத்தில் ஆண்டு சராசரி மழைபொழிவு குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உற்றுநோக்கி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ) தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைபொழிவு குறைவான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்?
ஆ) தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைபொழிவு மிதமான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்.
இ) தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் அதிகளவு ஆண்டு மழைபொழிவினைப் பெறும் மாவட்டங்கள் எவை?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 95
விடை:
அ. தமிழ்நாட்டின் ஆண்டு மழைப்பொழிவு குறைவான மண்டலம் கொங்கு மண்டலம் – குறைந்த கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி மிதமான குறைந்த
ஆ. தமிழ்நாட்டில் மிதமான அளவு ஆண்டு மழைப்பொழிவு பெறும் மாவட்டங்கள் – மதுரை, திண்டுக்கல், விருதுநகர், அதிகம் சிவகங்கை , சேலம், தேனி, வேலூர்
இ. தமிழ்நாட்டில் அதிகளவு ஆண்டு மழைப்பொழிவினைப் பெறும் மாவட்டங்கள் மழைப்பொழிவு விவரம் – கன்னியாகுமரி, கடலூர், திருவாரூர், நாகை,

6th Science Guide நீர் Additional Important Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :

Question 1.
புவியில் காணப்படும் நீரின் அளவினை 100% எனக் கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்னீரின் அளவு.
அ) 97%
ஆ) 93%
இ) 3%
ஈ) 0.3%
விடை:
இ) 3%

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
வளிமண்டல அழுத்தத்தில் நீர் பனிக்கட்டியாகும் உறைநிலை வெப்பநிலை ____
அ) 100° C
ஆ) 0°C
இ) 0.10° C
ஈ) 10° C
விடை:
ஆ) 0° C

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தடி நீர் ஆதாரம் அல்ல?
அ) அடிகுழாய்
ஆ) நீருற்று
இ) சதுப்பு நில நீர்
ஈ) கிணறு
விடை:
இ) சதுப்பு நில நீர்

Question 4.
நாள் ஒன்றிற்கு மனிதன் குடிக்க வேண்டிய குடிநீரின் அளவு லிட்டர்
அ) 2 – 3 லி
ஆ) 3 – 4 லி
இ) 4 – 5 லி
ஈ) 1 – 2 லி
விடை:
அ) 2 – 3 லி

Question 5.
நீர்நிலைகள் கடலை சந்திக்கும் இடம் _____
அ) சதுப்பு நிலம்
ஆ) முகத்துவாரம்
இ) ஏரி
ஈ) பனிப்பாறைகள்
விடை:
ஆ) முகத்துவாரம்

II. சரியா ? தவறா ? எனக் கூறுக.

Question 1.
மொத்த மேற்பரப்பு நன்னீரில் அதிகம் காணப்படுவது ஏரிகள்.
விடை:
சரி

Question 2.
கடல்நீரில் உப்பு அதிகமாக இருக்கக் காரணம் எரிமலைகள் கடலுக்கடியில் கடல்நீருடன் உப்பை சேர்ப்பது.
விடை:
சரி

Question 3.
நீர் ஒளிபுகும் தன்மை அற்ற வேதிப்பொருள்.
விடை:
தவறு

Question 4.
ஆறு, ஏரிகளில் நீராவிப்போக்கு நடைபெறுகிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 5.
குடிநீரில் தொற்று நீக்க நைட்ரஜன் பயன்படுகிறது.
விடை:
தவறு

III. பொருத்துக.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 96

IV. ஒப்புமை தருக.

Question 1.
மழைப்பொழிவின்மை : நீர் பற்றாக்குறை :: காடுகளை பாதுகாத்தல் : ____
விடை:
நீர் மேலாண்மை

Question 2.
உறைந்த நீர் : பனியாறு :: மேற்பரப்பு நீர் : _____
விடை:
ஆறு

Question 3.
ஆவியாதல் : கடல் :: ____ : தாவரங்கள்
விடை:
நீராவிப்போக்கு

Question 4.
நீர் வடிகட்டுதல் : மணல் :: _____ : அம்மோனியா
விடை:
தொற்று நீக்குதல்

Question 5.
திண்மநிலை : ____ :: வாயுநிலை : நீராவி
விடை:
பனிக்கட்டி

V. மிகக்குறுகிய விடையளி

Question 1.
நீரின் இயைபு யாது?
விடை:
நீர் என்பது ஒளிபுகும் தன்மை கொண்ட சுவையற்ற, மணமற்ற மற்றும் நிறமற்ற ஒரு வேதிப்பொருளாகும்.

Question 2.
நீர் மூலக்கூறு எவ்வாறு உருவாகிறது? நீரின் மூலக்கூறு வாய்பாடு என்ன?
விடை:
இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகிறது.
நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H2O

Question 3.
உப்புநீர் என்றால் என்ன?
விடை:
அதிக அளவு கரைபொருள் கலந்துள்ள நீர் உப்பு நீர் எனப்படும். இந்த நீரை நாம் பயன்படுத்தவோ அல்லது பருகவோ இயலாது.

Question 4.
நீர் சுழற்சியின் மூன்று நிலைகள் யாவை?
விடை:
ஆவியாதல், சுருங்குதல் மற்றும் மழை பொழிதல்

Question 5.
நீராவிப்போக்கு என்றால் என்ன?
விடை:
தாவரங்களின் இலைத்துளைகளின் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவது நீராவிப்போக்கு எனப்படும்.

VI. விரிவான விடையளி

Question 1.
நீர் சுழற்சி என்றால் என்ன? அதன் நிலைகளை விவரி.
விடை:

  • சூரிய வெப்பத்தினால் நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்கு சென்று மேகமாக மாறுகிறது.
  • மேகங்களில் உள்ள நீர் குளிர்ந்து புவிக்கு மீண்டும் மழை அல்லது பனி வடிவில் தூய்மையாக வருகிறது.
  • இதுவே நீர் சுழற்சி எனப்படும். இது ஹைட்ராலீஜிக்கல் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. –
    1. ஆவியாதல் :
      கடல், குளம், ஆறுகளில் காணப்படும் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகின்றது.
    2. ஆவி சுருங்குதல் :
      நீராவி காற்றில் மேலே செல்ல செல்ல குளிர்ச்சியடைந்து நுண்ணிய நீர்த்திவலைகளாக மாறி மேகங்களை உருவாக்குகின்றன.
    3. மழை பொழிதல் :
      நுண்ணிய நீர்த்திவலைகள் மோதி பெரிய நீர்த்திவலையாக மாறுகிறது. மேகங்களை சுற்றியுள்ள காற்று குளிர்ச்சியடையும் போது மழை (அ) பனியாக புவியை வந்தடைகிறது.

Question 2.
நீரைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை விளக்குக.
விடை:
1. நீர் மேலாண்மை :
நீர் மேலாண்மை பின்வரும் காரணிகளைக் கொண்டுள்ளது.

  1. மக்களிடையே கழிவு நீரை நீர்நிலைகளில் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி வழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  2. நீரை மறுசுழற்சி செய்தல்
  3. உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைத்து நீர் மாசுபாட்டை குறைத்தல்
  4. நவீன நீர்ப்பாசன முறைகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன முறைகளை பயன்படுத்தி நீரை சிக்கனமாக பயன்படுத்துதல்

2. மழைநீர் சேமிப்பு :
மழைநீரை நேரடியாக சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல் மழைநீர் சேமிப்பு எனப்படும்.

  1. மழை பொழியுமிடத்தில் சேகரித்தல் : கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து வரும் மழை நீரை சேகரித்தல்
  2. ஓடும் மழைநீரை சேகரித்தல் :
    மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்தல்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 98