Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 1 Chapter 1 ஆற்றங்கரை அரசுகள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 1 Chapter 1 ஆற்றங்கரை அரசுகள்

4th Social Science Guide ஆற்றங்கரை அரசுகள் Text Book Back Questions and Answers

அ. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
சேர, சோழ, பாண்டியர்கள் __________ என அழைக்கப்பட்டனர்.
அ) நாயன்மார்கள்
ஆ) மூவேந்தர்கள்
இ) குறுநில மன்னர்கள்
விடை:
ஆ) மூவேந்தர்கள்

Question 2.
சேரர்களில் புகழ் பெற்ற அரசராகக் கருதப்படுபவர் ___________
அ) கரிகாலன்
ஆ) வல்வில் ஓரி
இ) சேரன் செங்குட்டுவன்
விடை:
இ) சேரன் செங்குட்டுவன்

Question 3.
சோழர்களின் துறைமுகம் ____________
அ) காவிரிப்பூம்பட்டினம்
ஆ) சென்னை
இ) தொண்டி
விடை:
அ) காவிரிப்பூம்பட்டினம்

Question 4.
பாண்டியர்களின் கொடியில் இடம்பெற்றுள்ள சின்னம் ___________ ஆகும்.
அ) மயில்
ஆ) மீன்
இ) புலி
விடை:
ஆ) மீன்

Question 5.
முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் ___________ ஆவார்.
அ) பாரி
ஆ) பேகன்
இ) அதியமான்
விடை:
அ) பாரி

ஆ. பொருத்துக.

1. சேரர்கள் – வைகை
2. சோழர்கள் – பாலாறு
3. பாண்டியர்கள் – பொய்கை
4. பல்லவர்கள் – காவிரி
விடை:
1. சேரர்கள் – பொய்கை
2. சோழர்கள் – காவிரி
3. பாண்டியர்கள் – வைகை
4. பல்லவர்கள் – பாலாறு

இ) குறுகிய விடையளி.

Question 1.
சேரர்களில் புகழ் பெற்ற அரசர்கள் யாவர்?
விடை:
இமயவர்மன், நெடுஞ்சேரவாதன், சேரன் செங்குட்டுவன்

Question 2.
‘கடையேழு வள்ளல்கள்’ என்போர் யாவர்?
விடை:
பேகன், பாரி, நெடுமுடிக்காரி, ஆய், அதியமான், நல்லி, வல்வில் ஓரி.

Question 3.
கரிகாலனின் சாதனைகளைக் குறிப்பிடுக.
விடை:
கரிகாலன் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்று, அங்கு சிறைப் பிடிக்கப்பட்ட போர்க்கைதிகளைக் கொண்டு காவிரியின் மீது கல்லணையைக் கட்டினார். 2000 ஆண்டுகள் ஆகியும், கல்லணை இன்றும் கரிகாலனின் புகழ்பாடும் வண்ணம் மிகக் கம்பீரமாகக் காவிரி ஆற்றின் குறுக்கே காட்சியளிக்கின்றது.

Question 4.
பல்லவர்களின் தலை நகரத்தையும் கடற்கரை நகரத்தையும் குறிப்பிடுக.
விடை:
காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரம் ஆகும். மகாபலிபுரம் பல்லவர்களின் கடற்கரை நகரம் ஆகும்.

ஈ.. யாருடைய கூற்று?

Question 1.
“யானோ அரசன், யானே கள்வன்”.
விடை:
பாண்டியன் நெடுஞ்செழியன்.

4th Social Science Guide ஆற்றங்கரை அரசுகள் InText Questions and Answers

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 127

Question 1.
முற்கால சேரர்களில் புகழ் பெற்ற அரசர்கள் யாவர்?
விடை:
இமயவர்மன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன்.

Question 2.
இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட காப்பியத்தின் பெயர் என்ன?
விடை:
சிலப்பதிகாரம்.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 128

Question 1.
பண்டைய சோழ அரசர்களுள் புகழ் பெற்ற அரசர் -யார்?
விடை:
கரிகால் பெருவளத்தான்’ என அழைக்கப்பட்ட கரிகாலச் சோழர்.

Question 2.
சோழர்களின் தலைநகரம் மற்றும் துறைமுகங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:
உறையூர் சோழர்களின் தலைநகரமாகும். காவிரிப் பூம்பட்டினம் சோழர்களின் துறைமுகம் ஆகும்.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 129

Question 1.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்ன ன் யார்?
விடை:
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகும்.

Question 2.
மதுரைக் காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் யார்?
விடை:
மதுரைக் காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் மாங்குடி மருதன்.

Question 3.
பாண்டியர்களின் கொடியில் குறிக்கப்பட்டுள்ள சின்னம் எது?
விடை:
பாண்டியர்களின் கொடியில் மீன் சின்னம் குறிக்கப்பட்டுள்ளது.

செயல்பாடு 1 பக்கம் 130

பண்டைய தமிழ் பேரரசுகள் (மூவேந்தர்கள்)
கோடிட்ட இடத்தை நிரப்புக
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 ஆற்றங்கரை அரசுகள் 1

செயல்பாடு 2 பக்கம் 130

மூவேந்தர்கள் ஆட்சிக்குட்பட்ட தற்போதைய தமிழக மாவட்டங்களைப் பட்டியலிடுக.
விடை:
சேரர்கள் : ஈரோட்டின் மேற்கு மாவட்டம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி.

சோழர்கள் : திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர்

பாண்டியர்கள் : மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம்.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 131

Question 1.
பல்லவர்களின் தலைநகரம் எது?
விடை:
காஞ்சிபுரம்

Question 2.
தமிழ்நாட்டில் தொண்டை மண்டலம்’ எந்த திசையில் அமைந்துள்ளது?
விடை:
தொண்டை மண்டலம் தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 132

Question 1.
ஔவையாருக்கு நெல்லிக்கனியை வழங்கியவர் யார்?
விடை:
ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனியை வழங்கினார்.

Question 2.
மயிலுக்குத் தமது போர்வையை தந்தவர் யார்?
விடை:
பேகன் மயிலுக்குத் தமது போர்வையைத் தந்தார்.