Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 3 இரண்டாம் உலகப்போர் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

10th Social Science Guide இரண்டாம் உலகப்போர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
அ) செப்டம்பர் 2, 1945
ஆ) அக்டோபர் 2, 1945
இ) ஆகஸ்ட் 15, 1945
ஈ) அக்டோபர் 12, 1945
விடை:
அ) செப்டம்பர் 2, 1945

Question 2.
சர்வதேச சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
அ) ரூஸ்வெல்ட்
ஆ) சேம்பெர்லின்
இ) உட்ரோ வில்சன்
ஈ) பால்டுவின்
விடை:
இ உட்ரோ வில்சன்

Question 3.
ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
அ) க்வாடல்கெனால் போர்
ஆ) மிட்வே போர்
இ) லெனின்கிரேடு போர்
ஈ) எல் அலாமெய்ன் போர்
விடை:
ஆ) மிட்வே போர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 4.
அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
அ) கவாசாகி
ஆ) இன்னோசிமா
இ) ஹிரோஷிமா
ஈ) நாகசாகி
விடை:
இ ஹிரோஷிமா

Question 5.
ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?
அ) ரஷ்யர்கள்
ஆ) அரேபியர்கள்
இ) துருக்கியர்கள்
ஈ) யூதர்கள்
விடை:
ஈ) யூதர்கள்

Question 6.
ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இங்கிலாந்துப் பிரதமர் யார்?
அ) சேம்பர்லின்
ஆ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
இ) லாயிட் ஜார்ஜ்
ஈ) ஸ்டேன்லி பால்டுவின்
விடை:
அ) சேம்பர்லின்

Question 7.
எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?
அ) ஜீன் 26, 1942
ஆ) ஜீன் 26, 1945
இ) ஜனவரி 1, 1942
ஈ) ஜனவரி 1, 1945
விடை:
ஆ) ஜீன் 26, 1945

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இராணுவ நீக்கம் செய்யப்பட்ட …………….. பகுதியை ஹிட்லர் தாக்கினார்.
விடை:
ரைன்லாந்து

Question 2.
இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.
விடை:
ரோம்-பெர்லின் டோக்கியோ அச்சு உடன்படிக்கை

Question 3.
……………… கடன் குத்தகைத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
விடை:
ரூஸ்வெல்ட்

Question 4.
1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ………………. ஆவார்.
விடை:
சேம்பர்லின்

Question 5.
……………. என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.
விடை:
ரேடார்

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர் 2

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

Question 1.
கூற்று : குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
காரணம் : அவர் 1941இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
இ) காரணம் கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை.
ஈ) காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை .
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
விடை:

  • இத்தாலி – முசோலினி
  • ஜெர்மனி – ஹிட்லர்
  • ஸ்பெயின் – பிராங்கோ

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 2.
ஹிட்லர் ஜெர்மன் மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?
விடை:
அடால்ப் ஹிட்லரின் எழுச்சி:

  • ஜெர்மனி பெருமளவு அவமானப்படுத்தப்பட்டதாக நிலவிய கருத்தைப் பயன்படுத்தி, தனது வல்லமை மிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும் உணர்ச்சிமிக்கப் பேச்சுக்களாலும் ஜெர்மனியை அதன் இராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறி அடால்ப் ஹிட்லர் மக்களைத் தன்பக்கம் ஈர்த்தார்.
  • தேசிய சமதர்மவாதிகள் கட்சியை நிறுவினர்.
  • ஒன்று ஜெர்மனியரே சுத்தமான ஆரிய இனத்தவர் எனும் இனஉயர்வு மனப்பாங்கு மற்றொன்று மிக ஆழமான யூத வெறுப்பு.

Question 3.
முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.
விடை:

  • 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன் அறிவிப்பின்றி பெரும் தாக்குதலைத் தொடுத்தன.
  • அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடமாக்கி விட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது தான் படையெடுக்கும் போது எதிர்ப்பேதும் இருக்காது என ஜப்பான் நினைத்ததே இதற்குக் காரணமாகும்.
  • இத்தாக்குதலில் பல போர் கப்பல்களும் போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.
  • மிக முக்கியமாக இத்தாக்குதல் பெருமளவிலான வளங்களைக் கொண்டிருந்த அமெரிக்க நாட்டை நேசநாடுகளின் அணியில் இப்போரில் பங்கேற்க வைத்தது.

Question 4.
பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?
விடை:

  • 1942இல் பிரிட்டன் பொதுவான பெவரிட்ஜ் அறிக்கை என்றழைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டது.
  • பொதுமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது, உடலநலப் பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் தொகுப்பாக இடம் பெற்றிருந்தன.

Question 5.
பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • “பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்கள்” எனக் குறிக்கப்படும் உலகவங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு உலக வங்கியின் இரு முக்கிய அங்கங்கள்.
  • புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கானப் பன்னாட்டு வங்கி, மற்றொன்று பன்னாட்டு வளர்ச்சி முகமை ஆகும். இவையிரண்டுமே உலகவங்கி என்ற பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 6.
பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?
விடை:
பன்னாட்டு நிதியமைப்பின் நோக்கங்கள் :
உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுவது, நிதி நிலையை உறுதியானதாக வைத்திருத்தல், பன்னாட்டு வணிகத்திற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது, வேலை வாய்ப்பினைப் பெருக்குவது, நீடித்தப் பொருளாதார வளர்ச்சி, உலகம் முழுவதிலும் வறுமையை ஒழிப்பது என்பனவாகும்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
விடை:
இரண்டாம் உலகப்போரின் விளைவுகள்:
உலகம் இரு அணிகளாகப் பிரிதல்:

  • இரண்டாவது உலகப்போர் உலகில் அடிப்படையானதும் முக்கியமானதுமான பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
  • ஒரு அணி கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட அமெரிக்காவால் தலைமையேற்கப்பட்டது.
  • மற்றொரு அணிக்கு சோவியத் யூனியன் தலைமை தாங்கியது.
  • கம்யூனிச நாடுகள், கம்யூனிசமல்லாத நாடுகளென ஐரோப்பா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

அணு ஆயுதப்பரவல்:

  • அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் போட்டியில் இறங்கி, ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்தன.
  • பல நாடுகளில் இராணுவத்திற்கான செலவினங்கள் உச்சத்தை எட்டின.

பன்னாட்டு முகமைகள் :

  • பல பன்னாட்டு முகமைகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
  • காலனி நீக்கச் செயல்பாட்டின் அடிப்படையில் காலனியாதிக்கச் சக்திகள் தங்களது காலனிகளுக்கு விடுதலை வழங்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர்.
  • அதில் இந்தியா முதலாவதாய் சுதந்திரம் பெற்றது.

Question 2.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க.
விடை:
நிர்வாக அமைப்பு:

  • ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது செயலகம் ஆகும்.
  • இதன் தலைமைச் செயலாளர், பொதுச்சபையில், பாதுகாப்பு சபையின் பரிந்துரையின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • பொதுச் செயலாளர் தனது காபினெட் உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் ஆகியோரின் துணையோடு ஐக்கிய நாடுகள் சபையை நடத்துகிறார்.
  • பன்னாட்டு நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் சபையின் நீதி நிர்வாகக்கிளையாகும்.
  • இது ஹாலந்திலுள்ள தி ஹேக்கில் அமைந்துள்ளது. பொருளாதார சமூக மாமன்றம் ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது அங்கமாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் அனைத்துப் பொருளாதாரச் சமூகப் பணிகளை ஒருங்கிணைப்பது இவ்வமைப்பின் பணியாகும்.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் வட்டாரங்களின் வளர்ச்சிக்காக பல பிராந்திய பொருளாதார ஆணையங்கள் செயல்படுகின்றன.
  • அவைப் பொருளாதார சமூகமாமன்றத்தின் துணையமைப்புகளாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

ஐ.நா.வின் செயல்பாடுகள்:

  • 1950களில் காலனியாதிக்க நீக்கம் முக்கிய பிரச்சனையாகும்.
  • மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகாலமாற்றம், பாலினச் சமத்துவம் ஆகியன தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு வளையத்தினுள் உள்ளன.
  • மிகச் சிறப்பாகக் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது ஐ.நா.வின் அமைதிப்படை ஆகும்.
  • உலகம் முழுவதிலும் மோதல்கள் அரங்கேறியப் பல்வேறு பகுதிகளில் அப்படை பணி செய்துள்ளது.

10th Social Science Guide இரண்டாம் உலகப்போர் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
1919 ஜீன்-ல் ……………… உடன்படிக்கையோடு முதல் உலகப் போர் முடிவுற்றது.
அ) லண்ட ன்
ஆ) வெர்செய்ல்ஸ்
இ) பிரெஸ்ட் லிட்டோவஸ்க்
ஈ) மங்க ளூர்
விடை:
ஆ) வெர்செய்ல்ஸ்

Question 2.
செக்கோஸ்லோவாக்கியாவின் ஒரு பகுதி …………………
அ) ரைன்லாந்து
ஆ) நியூசிலாந்து
இ) அயர்லாந்து
ஈ) சூடட்டன்லாந்து
விடை:
ஈ) சூடட்டன்லாந்து

Question 3.
கிழக்குப் பகுதிகளில் ………………. இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
அ) ரஷ்யா
ஆ) சீனா
இ) ஜப்பான்
ஈ) ஜெர்மனி
விடை:
இ ஜப்பான்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 4.
இங்கிலாந்துப் பிரதமர் …………………. ஆவார்.
அ) கிளமென்சோ
ஆ) கெரனர்ஸ்கி
இ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
ஈ) முசோலினி
விடை:
இ வின்ஸ்டன் சர்ச்சில்

Question 5.
சேம்பர்லின் தனது பிரதமர் பதவியை …………………….. ல் துறந்தார்.
அ) 1941
ஆ) 1907
இ) 1991
ஈ) 1940
விடை:
ஈ) 1940

Question 6.
ஹிட்லரின் ‘மின்னல் வேகத் தாக்குதல் ‘…………………… எனப்பட்டது.
அ) ரேடார்
ஆ) சோனார்
இ) பிளிட்ஸ்கிரிக்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ பிளிட்ஸ்கிரிக்

Question 7.
ஹிட்லர் தனது திட்டங்களை …………………….. மூலம் பிரிட்டனை வற்புறுத்த விருப்பினார்.
அ) இராணுவ தாக்குதல்
ஆ) பனிப் போர்
இ) குண்டு தாக்குதல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ குண்டு தாக்குதல்

Question 8.
லண்டன் நகரம் குண்டுக்கு இரையான இந்நிகழ்வு …………………. எனப்பட்டது.
அ) இறுதி தீர்வு
ஆ) பேரழிவு
இ) மின்ன ல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ மின்னல்

Question 9.
ஜப்பான் ………………. உடன் சேர்ந்து போரிட்டது.
அ) அச்சு நாடுகள்
ஆ) நேச நாடுகள்
இ) நடுநிலை நாடுகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) அச்சு நாடுகள்

Question 10.
கடன் குத்தகைத் திட்டத்தை ……………… ல் ரூஸ்வெல்ட் தொடங்கினார்.
அ) 1941 மார்ச்
ஆ) 1940 ஜீலை
இ) 1971 ஆகஸ்ட்
ஈ) 1970 டிசம்பர்
விடை:
அ) 1941 மார்ச்

Question 11.
1945ல் …………….. கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
அ) ஹிட்லர்
ஆ) முசோலினி
இ) ஸ்மட்ஸ்
ஈ) ஹெர்சாக்
விடை:
ஆ முசோலினி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 12.
ஹிட்லர் ……………… ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார்.
அ) 1945
ஆ) 1954
இ) 1934
ஈ) 1905
விடை:
1945

Question 13.
1931ல் …………ப் படைகள் மஞ்சூரியாவின் மீது படையெடுத்தன.
அ) ஜப்பானிய
ஆ) சீன
இ) பிரெஞ்சு
ஈ) இல்லை
விடை:
அ) ஜப்பானிய

Question 14.
சீனத் தலைநகர் ………………… ஆகும்.
அ) நான்கிங்
ஆ) ஷாங்காய்
இ) ரூர்கேலா
ஈ) பெய்ஜிங்
விடை:
ஈ) பெய்ஜிங்

Question 15.
பெய்ஜிங் பொதுவாக ……………… என அழைக்கப்படுகிறது.
அ) இத்தாலி
ஆ) ஹங்கேரி
இ) ருமேனியா
ஈ) பீகிங்
விடை:
ஈ) பீகிங்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
முதல் உலகப் போர் ……………….. எனப்பட்டது.
விடை:
மாபெரும் போர்

Question 2.
போரின் இழப்பீட்டை ……………… வழங்கியது.
விடை:
ஜெர்மனி

Question 3.
சூடட்டன்லாந்தில் பேசும் மொழி ………………. ஆகும்.
விடை:
ஜெர்மன்

Question 4.
இத்தாலி அல்பேனியாவைக் கைப்பற்றிய ஆண்டு ………………….
விடை:
1939

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 5.
அமெரிக்க கப்பற்படைத் தளம் ……………………… ஆகும்.
விடை:
முத்துத் துறைமுகம்

Question 6.
க்வாடெல்கெனால் போர் …………………….. மாதங்கள் நீடித்தது.
விடை:
பல

Question 7.
காலனித்துவ அடிப்படையில் ………………….. முதலாவதாக சுதந்திரமடைந்தது.
விடை:
இந்தியா

Question 8.
இரண்டாம் உலகப் போரின் போது உலகம் …………….. துருவங்களாகப் பிரிந்தது.
விடை:
இரு

Question 9.
………………த் தொழில் யூதர்களின் முக்கிய தொழில் ஆகும்.
விடை:
வட்டி

Question 10.
ஷேக்ஸ்பியரின் பிரபலமான நாடகம் ……………… ஆகும்.
விடை:
வெனிஸ் நகர வணிகர்

Question 11.
மனித உரிமைப் பிரகடனம் ……………… கட்டுரைகளைக் கொண்டது.
விடை:
30

Question 12.
மனித உரிமைகள் தினம் ……………… ஆகும்.
விடை:
டிசம்பர் – 10

Question 13.
ஐக்கிய நாடுகள் …………………. உறுப்பு நாடுகளைக் கொண்டது.
விடை:
193

Question 14.
ஐ.நா வின் தலைமையகம் ……………………
விடை:
நியூயார்க்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 15.
உலக வங்கி ……………. பிரிவைக் கொண்டது.
விடை:
2

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர் 4

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : இத்தாலி முசோலினியின் சர்வாதிகார ஆட்சி 1933ல் தூக்கியெறியப்பட்டது.
காரணம் : ஜெர்மனி வடக்கே ஒரு பொம்மை அரசை நிறுவி அதில் முசோலினியை அமரவைத்தது.

அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமானது.
ஆ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமாக இல்லை.
இ) இரண்டும் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
விடை:
ஈ) கூற்று தவறு. காரணம் சரி

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் ஆக்கிரமிப்புகள் யாவை?
விடை:

  • தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் தனது பேரரசை விரிவாக்க வேண்டுமென்ற தனது திட்டத்தில் ஜப்பான் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது.
  • குவாம், பிலிப்பைன், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, டச்சு, கிழக்கிந்தியா (இந்தோனேசியா). பர்மா ஆகிய அனைத்தும் ஜப்பானிடம் வீழ்ந்தன.

Question 2.
பேரழிவுப் படுகொலை – நீவீர் அறிந்தது என்ன?
விடை:
இரண்டாவது உலகப் போரின் போது ஜெர்மானியர்களால் ஆறு மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்ட இன அழிப்பை விளக்குவதற்கு பேரழிவுப்படுகொலை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 3.
மனித உரிமைப் பிரகடனம் வரையறு.
விடை:

  • ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய மனித உரிமை சாசனத்தில் இனம், பால், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளின்றி அடிப்படைச் சுதந்திரமும் மனித உரிமைகளும் உலகளாவிய முறையில் கடைபிடிக்கப்படுவதை ஊக்குவிக்கப்போவதாக உறுதிமொழி மேற்கொண்டது.
  • உலகளாவிய முறையில் மனித உரிமைகளைக் காப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.

Question 4.
இஸ்ரேல் நாட்டின் பிறப்பு பற்றி எழுதுக.
விடை:

  • மேற்சொல்லப்பட்ட பேரழிவின் முக்கிய விளைவு யூத இன மக்களுக்கென இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதாகும்.
  • வரலாற்று ரீதியாக, ரோமர்கள் காலத்திலிருந்து இதுவே அவர்களின் தாயகமாகும்.

Question 5.
ஐநாவின் முக்கியத் துணை அமைப்புகள் யாவை? –
விடை:
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு.

  • உலக சுகாதார நிறுவனம்.
  • ஐ.நா. கல்வி, அறிவியல், மற்றும் பண்பாட்டு அமைப்பு.

Question 6.
உலக வங்கியின் இரு முக்கிய அம்சங்கள் யாவை?
விடை:

  • புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கானப் பன்னாட்டு வங்கி.
  • பன்னாட்டு வளர்ச்சி முகமை.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
பன்னாட்டு நிதியமைப்பை பற்றி விவரி.
விடை:
பன்னாட்டு நிதியமைப்பானது அடிப்படையில் ஹேரி டேக்ஸ்டர் ஒயிட், ஜான் மேனார்டு கெய்ன்ஸ் எனும் புகழ்பெற்றப் பொருளாதார நிபுணர்களின் மூளையில் உதித்த குழந்தையாகும்.

இவ்வமைப்பு 1945இல் 29 உறுப்புநாடுகளைக் கொண்டு முறையாக தொடங்கப்பெற்றது. தற்போது 189 நாடுகள் உறுப்புநாடுகளாக உள்ளன.

இதனுடைய அடிப்படை நோக்கம் உலகம் முழுவதிலும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவதாகும்.

இவ்வமைப்பு பணம் செலுத்துவதில் சமநிலைப் பிரச்சனைகளை (ஏனெனில் இந்நாடுகளால் தங்கள் இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடிவதில்லை) சந்திக்கும் நாடுகளுக்குக் கடன் வழங்கும்.

ஆனால் கடன் வாங்கும் நாடுகள் மீது இவ்வமைப்பு வரவு செலவுத்திட்டங்களைச் சுருக்குதல், செலவுகளைச் சுருக்குதல் போன்ற கடுமையான நிபந்தனைகளைச் சுமத்துகிறது.

இந்நடவடிக்கைகள் பெரும்பாலும் வளரும் நாடுகளால் விரும்பப்படுவதில்லை.

ஏனெனில் மக்களுக்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்களைக் கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 2.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஐரோப்பாவில் மக்கள் நல அரசுகள் பற்றி விவரி.
விடை:
மக்கள் நலஅரசு எனும் சொற்றொடர், அரசாங்கமே மக்களின் சமூகப் பொருளாதார நலன்களுக்குப் பொறுப்பு என்ற கோட்பாட்டைக், குறிப்பதாகும்.

1942இல் பிரிட்டன் பொதுவாக பெவரிட்ஜ் அறிக்கை என்றழைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டது.

பொதுமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது, உடல் நலப்பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் தொகுப்பாக இடம் பெற்றிருந்தன.

போருக்குப் பின்னர் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சியமைத்தது.

“தொட்டிலிலிருந்து கல்லறை வரை” மக்களைக் கவனித்துக்கொள்ளும் திட்டங்களை மேற்கொள்ளப்போவதாக அவ்வரசு உறுதியளித்தது.

தேசிய நலச் சேவையின் மூலம் இலவச மருத்துவ வசதி, முதியோர்க்கு ஓய்வூதியம், வேலையற்றோர்க்கு உதவித்தொகை போன்ற நிதியுதவிகள் குழந்தை நல சேவைகள், குடும்பநலச்சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

அனைவருக்குமான இலவசப் பள்ளிக் கல்வி என்பதற்கு மேலாக இவையனைத்தும் அளிக்கப்பட்டன.

VII. செயல்பாடுகள்

உலக வரைபடத்தில் அச்சு நாடுகள், நேசநாடுகள் ஆகியவற்றைக் குறிக்கவும்.
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர் 5