Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Social Science Solutions Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம்
பக்கம் 102:
செயல்பாடு:
நாம் எழுதுவோம் :
விடுபட்ட இடங்களைக் குறிப்புகளைக் கொண்டு நிரப்புக.
கேள்வி 1.
விடை :
பக்கம் 105:
செயல்பாடு:
நாம் எழுதுவோம் சரியா / தவறா எழுதுக.
கேள்வி 1.
மாவட்ட ஆட்சியர் இயற்கைப் பேரிடரின் போது தக்க நடவடிக்கைகள் எடுப்பார்.
விடை :
சரி
கேள்வி 2.
மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி அமைப்புகளை மேற்பார்வையிட மாட்டார்.
விடை :
தவறு
கேள்வி 3.
காவல்துறைக் கண்காணிப்பாளர் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யமாட்டார்.
விடை :
சரி
கேள்வி 4.
மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகளின் தலைமைகளோடு இணைந்து மாவட்ட நிருவாகம் அமைதியாக நடைபெற பணியாற்றுவார்.
விடை :
சரி
மதிப்பீடு:
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கேள்வி 1.
மாவட்ட நிருவாகத்தின் தலைவர் ___________ ஆவார்
அ) மாவட்ட ஆட்சியர்
ஆ) நீதிபதி
இ) காவல்துறைக் கண்காணிப்பாளர்
விடை :
அ) மாவட்ட ஆட்சியர்
கேள்வி 2.
அரசாங்க மருத்துவமனைகளுக்கு ___________ பொறுப்பாளர் ஆவார்.
அ) காவல்காரர்கள்
ஆ) மருத்துவ அலுவலர்கள்
இ) ஓட்டுநர்கள்
விடை :
ஆ) மருத்துவ அலுவலர்கள்
கேள்வி 3.
காவல்துறை ___________ பாதுகாக்கிறது.
அ) உடல்நலம்
ஆ) வனம்
இ) சட்டம் மற்றும் ஒழுங்கு
விடை :
இ) சட்டம் மற்றும் ஒழுங்கு
கேள்வி 4.
_____________ மாவட்டத்தின் கல்வித்துறையின் செயல்பாட்டை கண்காணிப்பார்.
அ) வன அலுவலர்
ஆ) முதன்மைக் கல்வி அலுவலர்
இ) மருத்துவ அலுவலர்
விடை :
ஆ) முதன்மைக் கல்வி அலுவலர்
கேள்வி 5.
மாவட்டத்தில் சுகாதாரத்தைப் பேணுவதற்கு ____________ அறிவுரை வழங்குவார்.
அ) மருத்துவ அலுவலர்
ஆ) வன அலுவலர்
இ) வருவாய்துறை அலுவலர்
விடை :
அ) மருத்துவ அலுவலர்
II. சரியா தவறா எழுதுக.
கேள்வி 1.
மாவட்ட ஆட்சியர் UPSC நடத்தும் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
விடை :
சரி
கேள்வி 2.
ஆசிரியர் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பதனை கண்காணிப்பார்.
விடை :
தவறு
கேள்வி 3.
முதன்மைக் கல்வி அலுவலர் கல்வித்துறையைக் கண்காணிப்பார்.
விடை :
சரி
கேள்வி 4.
காவல் அலுவலர்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்குப் பொறுப்பாளர்கள் ஆவர்.
விடை :
தவறு
கேள்வி 5.
வனத்துறை அலுவலர் வனத் துறைக்குப் பொறுப்பாளர் ஆவார்.
விடை :
சரி
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
கேள்வி 1.
மாவட்ட நிருவாகத்தின் தலைமை யார்?
விடை :
மாவட்ட ஆட்சியர் என்பவர், மாவட்ட நிருவாகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்.
கேள்வி 2.
மாவட்ட ஆட்சியர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
விடை :
இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அதிகாரிகள் U.P.S.C (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். ‘
கேள்வி 3.
மாவட்டத்திலுள்ள ஏதேனும் மூன்று துறைகளின் பெயர்களை எழுதுக.
விடை :
மாவட்ட கல்வித்துறை,
மாவட்ட காவல்துறை,
மாவட்ட மருத்துவத்துறை
கேள்வி 4.
மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை யார் பாதுகாக்கிறார்கள்?
விடை :
காவல்துறைக் கண்காணிப்பாளர் மாவட்டத்தின் காவல் துறைக்குப் பொறுப்பாளர் ஆவார். இவர் மாவட்டச் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கிறார்.
கேள்வி 5.
மருத்துவ அலுவலரைப் பற்றி எழுதுக.
விடை :
மருத்துவ அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொறுப்பாளர்கள் ஆவர். அவர்கள் சுகாதாரத்தைப் பற்றியும், உடல் நலத்தைப் பற்றியும் அறிவுரை வழங்குவார்கள்.