Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

பக்கம் 76:

செயல்பாடு:

நாம் எழுதுவோம்:

கேள்வி 1.
நீ கண்டு களித்த ஏதேனும் 5 இடங்களின் பெயர்களை எழுதுக. அவற்றுள் ஏதேனும் ஓர் இடத்தின் புகைப்படத்தை ஒட்டுக.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 1

விடை :

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 2

கொடைக்கானல்
ஊட்டி
மதுரை
கன்னியாகுமரி
மகாபலிபுரம்

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

பக்கம் 79:

செயல்பாடு:

நாம் விவாதித்து எழுதுவோம்

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 3

நினைவுச் சின்னங்களில் பெயர்கள் மற்றும் ஓவியங்களை மக்கள் கிறுக்கி வைத்துள்ளதைக் கண்டதுண்டா? இது சரி என்று உனக்கு தோன்றுகிறதா? உன் கருத்துகளை எழுதுக.
விடை :
நினைவுச் சின்னங்கள் நமது வரலாற்றுப் பாரம்பரியங்கள் ஆகும். அவற்றை நாம் அழிக்கவோ, சிதைக்கவோ கூடாது. அவற்றின் மீது எழுதுவதும், கிறுக்குவதும் மிக மோசமான செயல்கள் ஆகும். இத்தகைய செயல்களை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது.

நமது நாட்டின் வரலாற்றைப் பறைசாற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

மதிப்பீடு :

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கேள்வி 1.
கடற்கரைக் கோவில் அமைந்துள்ள இடம்
அ) மகாபலிபுரம்
ஆ) திருச்சி
இ) மதுரை
விடை :
அ) மகாபலிபுரம்

கேள்வி 2.
புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம்
அ) காஞ்சிபுரம்
ஆ) சென்னை
இ) திருச்சி
விடை :
ஆ) சென்னை

கேள்வி 3.
மகாபலிபுரத்தில் உள்ள கட்டடக் , கலைகளின் வகைகள்
அ) ஆறு
ஆ) மூன்று
இ) நான்கு
விடை :
இ) நான்கு

கேள்வி 4.
திருவள்ளுவர் ____________ இயற்றினார்.
அ) திருக்குறள்
ஆ) நன்னெறி
இ) ஆத்திசூடி
விடை :
அ) திருக்குறள்

கேள்வி 5.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள நந்தி __________ ஆல் கட்டப்பட்டது.
அ) அதிக கற்கள்
ஆ) இரு கற்கள்
இ) ஒரே கல்
விடை :
இ) ஒரே கல்

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

II. பொருத்துக.

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 4

விடை :

1. விவேகானந்தர் பாறை – கன்னியாகுமரி
2. அருங்காட்சியகம் – புனித ஜார்ஜ் கோட்டை
3. செஞ்சிக்கோட்டை – விழுப்புரம்
4. மகாபலிபுரம் – பல்லவர்கள்
5. பெரிய கோவில் – சோழர்கள்

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
புனித ஜார்ஜ் கோட்டையினுள் அமைந்துள்ளவை யாவை?
விடை :
அருங்காட்சியகமும் (Museum), தேவாலயமும் கோட்டையினுள் உள்ளன. தமிழக அரசின் தலைமைச் செயலகமும் கோட்டையினுள் தான் உள்ளது.

கேள்வி 2.
திருவள்ளுவர் உருவச்சிலை பற்றிக் குறிப்பு வரைக.
விடை :
திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் உள்ளது. இது 133 அடி உயரம் கொண்டது. இந்த உயரம் திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது.

கேள்வி 3.
திருவள்ளுவர் சிலையைச் சுற்றியுள்ள மூன்று நீர்ப்பரப்புகளின் பெயர்களை எழுதுக.
விடை :
திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையை அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகிய மூன்று நீர்ப்பரப்புகள் சூழ்ந்துள்ளன.

கேள்வி 4.
தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டியது யார்? அக்கோவிலின் ஏதேனும் ஒரு சிறப்பு அம்சம் பற்றி எழுதுக.
விடை :
தஞ்சாவூர் பெரிய கோவிலை இராஜராஜ சோழன் கட்டினார். இக்கோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லினால் ஆனது.

கேள்வி 5.
செஞ்சிக்கோட்டை பற்றிக் குறிப்பு எழுதுக.
விடை :
செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பழங்காலக் கோட்டைகளுள் இதுவும் ஒன்று. இங்கு இராஜாகோட்டை மற்றும் இராணிக் கோட்டை ஆகியவை அமைந்துள்ளன.

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

பக்கம் 85:

செயல்பாடு:

கேள்வி 1.
நீ ஏதேனும் உனக்குப் பிடித்த இடத்திற்குச் சுற்றுலா சென்று வர திட்டமிடுவது போன்று கற்பனை செய்து கொள். அப்பொழுது உன்னுடன் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்வாய்?

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 5

விடை :

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 6