Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 1 Chapter 4 பாதுகாப்பு Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Social Science Solutions Term 1 Chapter 4 பாதுகாப்பு
மதிப்பீடு
I. அடைப்புக் குறிக்குள் இருக்கும் விடைகளிலிருந்து சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(நீர், பாம்பு, சாலை விளக்கு, மின்சாரம், தீ)
கேள்வி 1.
தொட்டால், அது சுடும்.
விட்டால், அது எரியும், அது என்ன?
விடை:
தீ
கேள்வி 2.
நான் அன்றாடம் பயன்படுத்துவேன்.
அதனை மழைநேரங்களில் காண்பேன். அது என்ன?
விடை:
நீர்
கேள்வி 3.
கம்பிகளின் வழியே செல்வேன். ஆனால் நான் கொடி அல்ல.
நான் விளக்குகள் எரிய உதவுவேன். நான் யார்?
விடை:
மின்சாரம்
கேள்வி 4.
அவன் கால்கள் இல்லாமல் காடுகளில் உலாவுவான்.
அவன் யார்?
விடை:
பாம்பு
கேள்வி 5.
சாலையில் நின்று நம்மை வழி நடத்துவான். அவனுக்கு மூன்று கண்கள் உண்டு. அவன் யார்?
விடை:
சாலை விளக்கு
II. சரியா? தவறா என்று எழுதுக.
கேள்வி 1.
நாம் சமையல் அறையில் விளையாடக்கூடாது.
விடை:
சரி
கேள்வி 2.
ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்லலாம்.
விடை:
தவறு
கேள்வி 3.
நாம் மின்சாதனங்களை ஈரமான கையால் தொடக்கூடாது.
விடை:
சரி
கேள்வி 4.
நாம் நமது வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
விடை:
சரி
கேள்வி 5.
நாம் கண்ணாடி பொருள்களை வைத்து விளையாடலாம்.
விடை:
தவறு
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
கேள்வி 1.
விபத்து நேர்வதற்கான காரணங்கள் சிலவற்றை எழுதுக. விபத்திற்கானக் காரணங்கள் :
விடை:
- அவசரம்
- கவனக்குறைவு
- விழிப்புணர்வு இன்மை
- வெறுப்பு
- விதிகளை மீறுதல்
- முறையான பயிற்சி இன்மை
- பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாது இருத்தல்
கேள்வி 2.
நமது உடையில் தீப்பற்றினால் நாம் என்ன செய்யவேண்டும்?
விடை:
நமது உடையில் தீப்பற்றினால் நாம் :
- ஓடக்கூடாது.
- கீழே படுத்துப் புரளவேண்டும்.
- ஓடினால் எளிதில் தீ பரவும்.
கேள்வி 3.
மின்விபத்திலிருந்து நாம் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்?
விடை:
- மின்பொத்தான்களையும், மின்கம்பிகளையும் ஈரமான கையால் தொடக்கூடாது.
- சலவைப்பெட்டி மற்றும் இதர மின்சாதனங்களை மின் இணைப்பில் இருக்கும்பொழுது தொடக்கூடாது.
- மின்மாற்றி மற்றும் மின்கோபுரங்கள் அருகில் விளையாடக்கூடாது.
- மின்கம்பத்தின் மேலே ஏறக்கூடாது.
- மின்பொத்தான் பெட்டியில் குச்சி போன்ற பொருள்களை நுழைக்கக்கூடாது.
- மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகில் eவிளையாடக் கூடாது.
கேள்வி 4.
நாம் எங்கு சாலையைக் கடக்க வேண்டும்?
விடை:
பாதசாரிகள் கடக்கும் இடம் வரிக்குதிரை போன்று கருப்பு மற்றும் வெள்ளைக் கோடுகளுடன் காணப்படும். இந்த இடத்தில் மட்டுமே பாதசாரிகள் சாலையைக் கடக்க வேண்டும்.
கேள்வி 5.
சில விஷப்பூச்சிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
பாம்பு, தேள், சிலந்தி, குளவி.
IV. வண்ணம் தீட்டுவோம்
சாலை விளக்கு (Traffic Signal)
விடை: