Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 1 Chapter 1 குடும்பம் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Social Science Solutions Term 1 Chapter 1 குடும்பம்
பக்கம் 148
உனது உறவினர்களை எவ்வாறு அழைப்பாய்?
கேள்வி 1.
அம்மாவின் அம்மா : _________________________
விடை:
பாட்டிமா
கேள்வி 2.
அப்பாவின் அப்பா : _________________________
விடை:
தாத்தா
கேள்வி 3.
தந்தையின் சகோதரி : _________________________
விடை:
அத்தை
கேள்வி 4.
தாயின் சகோதரன் : _________________________
விடை:
மாமா
உன் உறவினர்கள் வரும்பொழுது நீ எவ்வாறு நடந்து கொள்வாய்?
விடை:
என் உறவினர்கள் வரும்போது சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்பேன். அவர்களுடன் அன்புடனும் பாசத்துடனும் நடந்து கொள்வேன்.
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
கேள்வி 1.
சமுதாயத்தின் அடிப்படை அலகு _________________________ ஆகும்.
அ) கிராமம்
ஆ) நகரம்
இ) குடும்பம்
விடை:
இ) குடும்பம்
கேள்வி 2.
_________________________ நமது அடிப்படை தேவைகளின் ஒன்று.
அ) சாய்விருக்கை (சோபா)
ஆ) இருப்பிடம்
இ) மகிழுந்து
விடை:
ஆ) இருப்பிடம்
கேள்வி 3.
தாய், தந்தை மற்றும் குழந்தைகள் சேர்ந்து வசிப்பது _________________________.
அ) சிறிய குடும்பம்
ஆ) பெரிய குடும்பம்
இ) கூட்டுக்குடும்பம்
விடை:
அ) சிறிய குடும்பம்
கேள்வி 4.
_________________________ தமிழர்களின் மிகச்சிறந்த பண்பு.
அ) விருந்தோம்பல்
ஆ)விழாக்கள் கொண்டாடுவது
இ) கோயிலுக்குச் செல்லுவது
விடை:
அ) விருந்தோம்பல்
கேள்வி 5.
குடும்பத்தை நடத்த _________________________
திட்டமிடுவது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழியாகும்.
அ) செல்வம்
ஆ) பணம்
இ) வரவு — செலவு
விடை:
இ) வரவு-செலவு
II. பொருத்துக.
1. பண்பு | ஒற்றுமையுடன் வாழ்வது |
2. வேலையைப் பகிர்வது | மாமா |
3. தாய்வழி உறவு முறை | காய்கறி வியாபாரி |
4. வெளியாட்கள் | உறவுமுறையை வலுப்படுத்துவது |
5. அண்டை வீட்டுக்காரர் | மரியாதை |
விடை:
1. பண்பு | மரியாதை |
2. வேலையைப் பகிர்வது | உறவுமுறையை வலுப்படுத்துவது |
3. தாய்வழி உறவு முறை | மாமா |
4. வெளியாட்கள் | காய்கறி வியாபாரி |
5. அண்டை வீட்டுக்காரர் | ஒற்றுமையுடன் வாழ்வது |
III. சரியா / தவறா.
கேள்வி 1.
ஒரு குடும்பமானது அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும்.
விடை:
சரி
கேள்வி 2.
நமது அண்டை வீட்டுக்காரர்கள் நமது உறவினர்கள். தவறு
விடை:
சரி
கேள்வி 3.
நமது வரவு-செலவைத் திட்டமிடுவதால் பொருளாதாரம் உயரும்.
விடை:
சரி
கேள்வி 4.
நாம் நமது பொருள்களை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளவும்.
விடை:
தவறு
கேள்வி 5.
எளிமையே ஒவ்வொரு குடும்பத்தின்சிறந்த கொள்கையாகும்.
விடை:
சரி
IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
கேள்வி 1.
குடும்பத்தின் வகைகளை எழுதுக.
விடை:
i) சிறிய குடும்பம்
ii) பெரிய குடும்பம்
iii) கூட்டுக் குடும்பம்
கேள்வி 2.
கூட்டுக்குடும்பம் என்றால் என்ன?
விடை:
இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது கூட்டுக்குடும்பம் எனப்படும்.
கேள்வி 3.
நமது குடும்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பண்புகள் யாவை?
விடை:
நாம் நம் குடும்பத்திலிருந்து அன்பு, மரியாதை, பாதுகாப்பு, பகிர்ந்து கொள்ளல் ஆகிய நற்பண்புகளைக் கற்றுக் கொள்கிறோம்.
கேள்வி 4.
அண்டை வீட்டுக்காரர்கள் என்போர் யாவர்?
விடை:
நமது வீட்டருகே பல குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களை நாம் அண்டை வீட்டுக்காரர்கள் என அழைக்கிறோம்.
கேள்வி 5.
குறிப்பு வரைக: குறிப்பு வரவு-செலவுத் திட்டம்’
விடை:
வரவும் செலவும் ஒரு குடும்பத்தின் முக்கிய அம்சங்கள். நாம் வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும். அடிப்படைத் தேவைகளை நாம் முதலில் நிறைவேற்ற வேண்டும். நம் வரவுக்கேற்றபடி திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். வரவையும் செலவையும் திட்டமிட்டு சமன் செய்தலே வரவுசெலவுத் திட்டம் எனப்படுகிறது.